பக்கம்:தமிழ் உரை நடை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலை நாட்டார் தொண்டு 191 டைய ஞானுேபதேச காண்டத்திலிருந்து இரண்டு பகுதி களேத் தம் நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். நாமும் அதிலே ஓரிரு பகுதிகளைக் கண்டு மேலே செல்வோம். அப்படியே பிற மேலே நாட்டு உரை நூலாசிரியர்களு டைய எழுத்துக்களைக் காணின் ஓரளவு அவர்கள் செய்த தொண்டும், அவர்கள் காலத்துத் தமிழ் உரைநடை வழக்கும் நன்கு விளங்கும். தத்துவபோத சுவாமிகளின் உரைநடையில் ஒரு சில பகுதிகளைக் காணலாம்: "இதிலே அவசியமாயறிய வேண்டிய விசேஷ முண்டு. அதேதென்முற் காரணமானது காரியத் துக்கு நன்மையெல்லாம் கொடுக்கிறதென்கிறது. காரியத்தைக் காரணமான துண்டாக்குகிற தென்று சொல்லப்படும். காரணத்தினலே கொடுக்கப்படுகிற நன்மை காரியத்திலே இரண்டு வகையாயிருக்கலாம். ஒரு வகையாவது: காரியத்திலே இருக்கிறதெல்லாம் காரணத்திலே சரியாயிருக்கிறது. இந்த வகையிலே அக்கினி அக்கினியைச் செனிப்பிக்கும். சிங்கத்தைச் சிங்கமானது பிறப்பிக்கும். மனுஷனும் மனுஷனைப் பிறப்பிப்பான். இப்படிப்பட்ட காரண காரியத்தை விசாரிக்கும்போது காரணத்திவேயிருக்கிற நன்மை யெல்லாங் காரியத்திலே சரியாயிருக்கிறதொழிய ஏற்றக் குறைச்சலாயிராது. இப்படிப்பட்ட காரண காரியத்தை அனுருப காரணமென்றும், அனுரூப காரியமென்றுஞ் சொல்லத் தகும். ' இவருடைய நீண்ட வாக்கிய அமைப்பிற்கு ஓர் உதாரணம் காண்போம்: "ஆகையினலே அந்த ஸ்தலத்திலே நிர்மல ஜல முள்ள பீசோன், சேயோன், திகிரீஸ், ஏவுயிருத்தே என்ற நாலு நதிகள் பரவியோட, அவைகளுடைய தரங்கங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/200&oldid=874476" இலிருந்து மீள்விக்கப்பட்டது