பக்கம்:தமிழ் உரை நடை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தமிழ் உரை கடை விளக்கென நின்றுயர்ந்த திருவள்ளுவருரைத்த பல வற்ருென்றை நான் தெரிந்துரைப்பத் துணிந்தேன். அந்நாயனர் தந்த பயன்' எனும் பெருங்கடலாழத் தின் மூழ்கி யாங்குடையரு மணி யொருங்கெடுத் தொருசிறு செப்பினடைத்தாற் போ ல த் திருவள்ளுவரது பயனெல்லாம் விரித்துப் பகரும்படி நான் வல்லனல்லேனகையின், அக்கடற்றுறை, சேர்ந்தொரு மணியெடுத்துக் காட்டலுணர்ந்தேன். அவர் சொன்ன குறளி னென்றே யிங்ங்ன நான் விரித்துரைப்பத் துணிந்தேன். அ ஃ தாவ து, ' மனத்துக்கண் மாசில தை லனைத்தறன் ஆகுல நீர பிற ' என்பது, இல்லறந் துறவறமென்ற இவ்விரண்ட னுள்ளும் அடங்கி நிற்குமெல்லாவறங்களும் மனத். தின் தூய்மையாற் பெறும் பெருமையே தரும்: மெனவும், மனத்திதினுள் மாசு கொண்டவன் செய்யுந் தவமுந் தானமு மற்றை யாவுமறத்தினரவ மாவதன்றி ய ற த் தி ன் பயனுளவல்லவெனவு: மக்குறளிரு பயனிவையென விரித்துக் காட்டுதும். வி ரி ப் ப வே, மெய்யும் பொய்யும் விளக்கி: யுட்பயன்றரு மெய்யறத்தின் நன்மையே வெளியா விஃதொன்றுணர்ந்து நாமதற் கொப்பநடந்தா லிது வீடெய்தும் வழியெனக் காணப்படும். பெரும் பொருணேர்ந்து பொய்ம்மணி கொள்வது கேடா யினும் பொருளை நேர்ந்தும் உடலினை வாட்டியும் உயிரை வருத்தியு மேற்கதி வீட்டிற் செல்லாச் சில பொய்யறங்களை யீட்டுவத்திலுங் கேடாமன்ருே? இதனை விலக்கித் தனது உயிராக்கங் காப்பது: வேண்டி யிருக்குறட் பயனராய்வது நன்றே.' 1. கிறித்தவமும் தமிழும், பக். 84.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/205&oldid=874486" இலிருந்து மீள்விக்கப்பட்டது