பக்கம்:தமிழ் உரை நடை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XI நேற்றும் இன்றும் இருபதாம் நூற்ருண்டின் இடைக்காலத்தில் தமிழ் உரை நடை கன்கு வளர்ச்சியுற்றுள்ளதென்பதை இன்று: அனைவரும். நன்ருக அறிந்துள்ளனர். பல நூற்றுக்கணக் கான திங்கள், கிழமை, நாள் இதழ்கள் தோன்றித் தமிழ். உரை நடையை வளர்த்து வருகின்றன. பல இதழ்கள் அரசியல் கட்சிக் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் தோன் றியனவாயினும், அவற்ருலும் தமிழ் வளர்கின்றது என் பதை யாரே மறுக்கமுடியும் இலக்கியத்துக்காகவும், சமய, வளர்ச்சிக்காகவும் ஒரு சில இதழ்களே காட்டில் உள்ளன. அவை வெளியிடும் எண்ணிக்கையும் ஒரு சில நூற்றுக்கணக் கிலேதான் அமையும். ஆயினும் அரசியல் அடிப்படையிலேஅமையும் இதழ்கள் வேகமான உணர்ச்சிகளைத் துாண்டும். வகையில் பீடு நடையில் தமிழ் உரை நடையைக்கொண்டு: வளர்கின்றன. அவ்வாருய அரசியல் இதழ்கள் பல ஆயிரக் கணக்கில் நாட்டில் இன்று உலவுகின்றன. தத்தம் கட்சிக் கொள்கைகளைப் பரப்ப உதவும் நாள் இதழ்கள் அக். கொள்கைகளை வளர்ப்பதோடு, செய்திகளைத் தரும் வகை. யிலும் பணி ஆற்றுகின்றன என்னலாம். புத்தம்புதிய செய்திகளே நாள்தோறும் தாங்கிய இதழ்கள் உரை கடையை வளர்ப்பனவே. அவற்றுள் ஒரு சிலவற்றின் கடை, இலக்கிய நடையில் இயங்கவில்லை என்ருலுங்கூட,. பெரும்பாலானவை தமிழ் மரபு கெடாத இலக்கிய வரம்பிற். குட்பட்ட உரை நடையையே கையாளுகின்றன என்ன ல்ாம். நன்ருகக் கற்றவர் மட்டுமன்றிச் சாதாரணமாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/228&oldid=874537" இலிருந்து மீள்விக்கப்பட்டது