பக்கம்:தமிழ் உரை நடை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேற்றும் இன்றும் 223 வி. கோ. சூரியநாராயண சாத்திரியார் நாடக உரை நடை: "ஐயா! குலாந்தகரே! நுமக்கேற்ற நண்பர் சுக சரீரர்! அவருக்கேற்ற நண்பர் நீர்! ஆனல், அவர் சரீரத்துக்குள் சுகமுண்டு, உம்முடை சரீரத்திலோ அஃதில்லை' "ஆ! அவ்வாறே செய்கிற்பேன். அதற்கைய மில்லை என்னுயிர் நாதனே! இன்று பிற்பகலொரு விடயம் நிகழ்ந்தது. அதனை நின்பாலுரையாது யார் பாலுரைக்கப் போகிறேன்,' சாமி! ஒரு சமாசாரம்-இந்தக் குலாந்தக எசமான் வீட்டிலே நம்ம மகராசா எதிரி பாண்டியன் .ஊரிலிருந்து இரண்டு வீரர்கள் வந்திருக்கிருர் களாம். அவர்களிலே ஒருத்தன் நம்ம மகராசா மகள் கலாவதியம்மாவை முத்தமிட்டிட்டானம். அதைப் பார்த்துக் கொண்டிருந்த குலாந்தக எசமான் இன்றைக்கு அரண்மனையிலே நம்ம மகாராசா அவர்களிடத்திலே தெரியப்படுத்தினர். அது என் காதிலே விழுந்தவுடனே இங்கே எசமான் களிடத்திலே தெரியப்படுத்த வேண்டுமென்று ஓடி வந்தேன்.' இவ்வாறு கொச்சைத் தமிழ் கலந்த உரை நடையும், வேறு வகையில் அமைந்த உரை நடையும் கலந்து வரும் நாடகங்களே இவர்கள் நாடகங்கள். சம்பந்த முதலியாரு டைய பெரும்பான்மையான நாடகங்கள் இந்த வகையிலே செல்ல, வி. கோ. கு. அவர்களுடைய உரை கடை இடத் திற்கு ஏற்ப ஓரளவு கொச்சையானலும், அவரது நாடக வியல் போன்றவற்றிலும் பிறவற்றிலும் உயர்ந்த கடையைக் காண முடிகின்றது. இந்த உரை நடையில் நாம் மற்ருென் 1. கலாவதி, பக். 75; 2. டிெ பக். 163; 3. டிெ பக். 177.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/232&oldid=874547" இலிருந்து மீள்விக்கப்பட்டது