பக்கம்:தமிழ் உரை நடை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தமிழ் உரை நடை தேடித் தந்தாலும், இலக்கிய வளர்ச்சி வரலாற்றில் அவை கருகிய மொட்டுக்களாகவே மதிக்கப் பெறும். இருவர்தம் உரை நடைகளுக்கும் இரண்டோர் எடுத்துக்காட்டுக்கள் கண்டு மேலே செல்லலாம். சம்பந்த முதலியார் நாடக உரை நடை: 'இதென்னமோ சமாசாரம் தெரியலே! என்னமோ லேகியம் தித்தீச்சிக்கின்னு இருந் துண்ணு எடுத்து சாப்பிட்டேன், வயித்தியர் பொட்டியிலேயிருந்து; அது நம்மெ தள்ளுது பூர்ணுதிலேகியம்-நல்ல லேகியம்.' என்ன அம்மணி! எனக்கொண்ணுந் தெரி யாதே! நான் தூங்கிக்கினு இருந்தேன். கூச்சல் கேட்டு என்ன விஷயமிண்ணு ஒடி வந்தேன்; தூக்க மெல்லாம் கெட்டுது. என்ன சேதி!' ‘அரசே, இது வரையில் நான் பட்டது வருத்த மன்று! இப்பொழுதுதான் எனக்குத் துக்கமாக இருக்கிறது. தம்முடைய வாயால் இவ்வண்ணம் கூறுகிறீர் நான் இதற்கோ பாத்திரன்? மகாராஜா வின் கட்டளையைக் கேட்டவுடனே இறந்திருப்பேன். ஆயினும், தம்மைக் கடைசி முறை பார்த்து விட்டு பிறகு தற்கொலை புரியலாமென்று வந்தேன்.8 "சத்திய சீலரே! மெச்சினேன் உமது பேரன்பை. உம்மைக் கொல்ல எனக்குச் சிறிதும் மனமில்லை, ஆயினும், நீர் வேண்டுவதை மறுக்கலாகாதென வுடன் பட்டேன், எடும் வாளை14 1. மனேகரன், பக். 49 3. டிெ பக். 71 2. டிெ பக். 16 4. டிெ பக், 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/231&oldid=874545" இலிருந்து மீள்விக்கப்பட்டது