பக்கம்:தமிழ் உரை நடை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேற்றும் இன்றும் 227 பின்பற்றித் தொகுத்த நூல்கள், ஒட்டிட்டுத் தைத்த உடைகள் போலாம். அவை ரம்மியம் தரு வதும் இல்லை; நூற்கணக்கில் வைத்து எண்ணப்படு வதும் இல்லை.' இவ்வாறு ஒரு புறம் தனித்தமிழ் இயக்கமும் மறுபுறம் கலப்பு மொழியியக்கமும் விரவிக் கலக்க, நேற்றும் இன்றும்கடந்த ஐம்பது ஆண்டு காலமாகத் தமிழ் உரை நடை நன்கு வளர்ந்து வருகிறது என்பதை நாம் நன்கு அறிகிருேம். காலஞ் சென்ற நமச்சிவாய முதலியார் அவர்கள் தமிழ் உரை நடை வளர்ச்சிக்குச் செய்த தொண்டினே நாம் மதிப் பிடமுடியாது. முதல் வகுப்புத் தொடங்கிப் பள்ளி வகுப்புக் களேத் தாண்டி, கல்லூரி வகுப்புக்கள் வரையிலும் அவர் பலப்பல பாடநூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். பள்ளிக் கூடங்களிற் பயிலும் சிறு பிள்ளைகள் உரை நடையைச் சொல் சொல்லாகப் பகுத்து உணர்ந்து, அவ்வுணர்ச்சிவழித் தாமே வாக்கியங்களே ஆக்கிக் கொள்ளும் வகையில் இலக் கண அமைதி கூடிய சிறு சிறு வாக்கியங்களே எழுதி வழி காட்டியவர் திரு. கா. நமச்சிவாய முதலியார் அவர்களாவர்: இன்று எத்தனையோ நூலாசிரியர்கள் பலப்பல பாட நூல்களே எழுதி வெளியிட்டு வருகின்ருர்கள். அவர் அனே வரும் தமக்கெல்லாம் முன்னேடியாய் கின்று வழிகாட்டிய கமச்சிவாய முதலியாருக்கு என்றென்றும் கடமைப்பட்டவ ராவர். - w . இருபதாம் நூற்ருண்டின் உரை நடையின் தந்தையார் எனப் போற்றத்தக்க பெருமை பெற்றவர் திரு. வி. க. என்ருல், அதை மறுப்பார்யாருமிலர். இன்று தமிழ்நாட்டில் வாழும் பல எழுத்தாளர்களே அவர்தம் எழுத்துக்களே 1. தமிழ் வியாசங்கள், பக். 125, 126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/236&oldid=874554" இலிருந்து மீள்விக்கப்பட்டது