பக்கம்:தமிழ் உரை நடை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் 25 கும். மேலே காட்டு மக்கள் உரைநடை என்பது வெறுங் கதைகளும் நாடகமும் எனவே நினைக்கிருர்கள். நம் நாட்டில் அந்த கிலே இல்லாவிட்டாலும் நாடகமும் உரை கடையாக ஓரளவு வளர்ந்று வந்துள்ளது. இந்த நூற்ருண் டின் தொடக்கத்தில் பலப்பல நாடகங்களும், கூத்துக்களும் நடைபெற்றன. அவையெல்லாம் உரைநடையால் ஆக்கப் பெற்றனவே. அவற்றுள் சிறந்தவை. ப. சம்பந்த முதலியார வர்கள் இயற்றிய நாடகங்களே. அறுபதுக்கு மேற்பட்ட உரைநடை நாடகங்களே எழுதி மறைந்த பம்மல் சம்பந்த முதலியாரவர்கள் உரை கடைக்குச் செய்த தொண்டைத் தமிழ் நாடு மறவாது. நாட்டு அரசியலாரும் அவரை மறவாது சிறப்பித்தனர். வி.கோ. சூரியங்ாாரயண சாத்திரியார் அவர்களுடைய இரண்டொரு நாடகங்களும் உரைநடையை வளர்க்க உதவின. சென்ற நூற்ருண்டில் வெளிவந்த சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மனேன்மணியம் என்னும் நாடகமும் அகவலாலான தென்ருலும், உரைநடையின்பால் சார்த்திக் கூற வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறு நாடகங் களும் தமிழில் உரைநடையை வளர்த்தன என்னலாம். இந்நூற்ருண்டின் தொடக்கத்தில் உண்டான பல நாள் இதழ், திங்கள் இதழ், கிழமை இதழ்களும் உரைநடையை வளர்த்து வருகின்றன. சுதேசமித்திரன் போன்ற பழைய காளிதழ்களும் பிறவும் தனித்தமிழ் முறையில் இயங்கவில்லை என்ருலும், அவைகளும் தமிழ் உரைநடையை வளர்க்கப் பெரிதும் உதவின என்பதை யாரே மறுக்கவல்லார்? இப்படி இந்த நூற்ருண்டில் இலக்கிய உரைநடைகள் மட்டுமன்றி, தாள்களின் உரைநடைகளும் தமிழ் இலக்கிய வரலாற்றில் கிலேத்த இடம் பெற்றுவிட்டன. இன்று-சிறப்பாக உரிமை பெற்ற பிறகு-இந்திய காட்டுப் பல்வேறு மொழிகள் வளர்வன போன்றே தமிழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/34&oldid=874609" இலிருந்து மீள்விக்கப்பட்டது