பக்கம்:தமிழ் உரை நடை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.28 . தமிழ் உரை நடை உரைக்கப்படுவனவவெல்லாம் உரையாயின், பாட்டும் வாய்திறந்து உரைக்கப்படுவதுதானே? அதையும் கொள்ள லாமோ? எனின் அவ்வாறு வழக்காறு இன்மையின், கொள்ளுதல் பொருத்தமாகாது என்று முடிவு செய்தல் வே ண் டு ம். சிலப்பதிகாரத்தை 'உரை யிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று கூறுவதும் அது பற்றி யேயாம். உரை பாட்டினும் வேறுபட்டது என்பதை இத் தொடர் நன்கு விளக்குகின்றதன்ருே? இனி உரை பாட்டினும் வேறுபட்டதாயினும், அதையும் செய்யுளில் அடக்கலாம் என்பர் சிலர். அவர்தம் கருத்துக்கு ஏற்பவே ஆசிரியர் தொல்காப்பியரும் உரையினைச் செய்யுளியலுள் அமைத்துள்ளமை நோக்கற்பாலது. செய்யப்படுவனவெல் லாம் செய்யுள். எனவே பாட்டாகச் செய்யப்படுவன பாட்டுச் செய்யுள்ளானபடி, உரையால் செய்யப்படு வனவெல்லாம் உரை நடைச் செய்யுள் என்று கொள்ளல் பொருந்தும். சொற்குப் பொருள் கூறும் நூல்கள் "செய்யுள்' என்னும் சொல்லுக்குப் பாட்டு, காவியம், உரை என்ற மூவகைப் பொருள்களும் உண்மையைக் குறிக் கின்றன. உரைச் செய்யுள் (Prose Composition) என்னும் ஒரு பகுதியே உள்ளதாகச் சென்னைப் பல்கலைக் கழக அகராதி குறிக்கின்றது. எனவே, உரையும் ஒருவகைச் செய்யுள் தொகுதி எனக் கொள்ளலாம். இனி, உரை என்பதற்குப் புகழ்' என்னும் மற்ருெரு பொருளும் இருப்பதாகக் கூறி, அதற்கு உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோ ஏத்தலும் என்ற சிலப்பதிகார அடியை உதாரணமாகக் காட்டுவார்கள். எனினும், அது :உரைக்கு முடிந்த பொருளாக அமையாது என்னலாம். 1. Tamil Lexicon. Vol. III, p. 1602. 2. Tamil Lexicon. Vol. I, p. 452.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/37&oldid=874615" இலிருந்து மீள்விக்கப்பட்டது