பக்கம்:தமிழ் உரை நடை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தமிழ் உரை நடை உலகுக்கு உணர்த்த இயலும். எப்படி உணர்த்துவது? எதை? எதற்காக? மனிதன் தான் கண்ட ஒருபொருளைப் பற்றி, கேட்ட ஒன்றைப் பற்றி, அல்லது நினைத்த ஒன்றைப் பற்றிப் பேசுவனவே உலகில் காணும் நூல்கள் அனைத்தும். அவை பாட்டானும் உரையானும் பயின்று வருகின்றன. அவை எதை உணர்த்துகின்றன? மற்ருெரு மனிதனைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோதான் அவை உணர்த்த முடியும். அப்படி உணர்த்தும்போது அது பாட்டாகவே இருப்பின், எதுகை மோனே நயம் கலக்கச் சில கற்பனைச் சொற்களையும் கலக்கக்கூடும். இன்று காணும் எத்தனையோ பாட்டிலக்கியங்களில் உண்மையினும் புனைந்துரையும் கற்பனையும் அதிகம் இருக்கக் காண்கின்ருேம். தமிழில் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் பாட்டுக்களில் இக்கற் பனையைக் காண இயலும். இவ்வாறு கற்பனையோடு கலந்த பாட்டுக்களால் எப்படி ஒரு மனிதனுடைய-ஒரு பொருளினு டைய - உண்மை நிலையினை உரையிட்டுக் காண முடியும்? மேலும், பாட்டின் கடையும் அமைப்பும், உரைகோள் வகை களும் அனைவருக்கும் எளிமையாகப் புரிவன வல்ல. அத் துடன் பயில்வார்க்குப் புதிய புதிய கருத்துக்கள் தோன்று வனவாய்- இதுவோ அதுவோ' என்று திட்டமாகப்பொருள் காண வகை இல்லாதனவாய் இதுவும்-அதுவும் என்று இரட்டுற மொழியும் சிலேடை வகையினவாய்ப் பாடல்கள் அமைவதைக் காண்கிருேம். இந்த நிலையில் பொருளின் உண்மை நிலையைப் பாட்டு எவ்வாறு உணர்த்த முடியும்? அந்த நல்ல தொண்டினைச் செய்வது உரைநடையேயாகும். ஆம் ஒரு பொருளின் உண்மை நிலையையோ ஒரு மனிதனது உண்மைத் தன்மையையோ மொழி வழி உலகுக்கு உரை -யிட்டுக் காட்டுவதே - இந்த வகையில் இருக்கிறது என்று தட்டான் உரையிட்டுப் பொன்னேக் காட்டுவது போலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/39&oldid=874619" இலிருந்து மீள்விக்கப்பட்டது