பக்கம்:தமிழ் உரை நடை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழ் உரைநடை லேயே மேலே நாடுகளில் உரைநடை தோன்றி வளர்ந்த தோடு அதை ஆராயும் திறம் பெற்றவர்களும் அக் காலத்தில் இருந்தார்கள் என்பதையும், அவர்கள் அதை எவ்வெவ்வாறு ஆராய்ந்தார்கள் என்பதையும் அட்கின்ஸ் என்பார் தமது பழங்கால இலக்கியத் திறய்ைவு " என்ற நூலில் நன்கு விளக்கியுள்ளார். இந்நூலில் இவர் அக்காலப் பழைய உரோம, கிரேக்க நாட்டுப் பல வேறு இலக்கியங்களே எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி, அவற்றின் சிறப்பியல்புகளையும், அவற். றின் திறன் ஆய்ந்து கண்ட அறிஞர்தம் உரைகளையும் நன்கு விளக்கிக் காட்டியுள்ளார். அவற்றுள் உரை நடை பற்றிய பகுதியும் ஒன்று உண்டு. அதில் இவர் அக் காலத்தில் அப்பழம் பெருநாடுகளில் வழங்கிய உரை வளத் தையும் அவற்றை அறிஞர் ஆய்ந்த கலே நலத்தையும் தெள்ளத் தெளிய ஆய்ந்து காட்டுகிருர், கிரேக்க காட்டு அன்றைய உரை நூல் திறய்ைவுபற்றி ஆசிரியர் நன்கு விளக்குகிருர். அன்றைய (Augustan era) திறய்ைவாளர்களுள் சிறந்தவராக டயோனிசியஸ்' என்ப வரை இவர் காண்கின்ருர். அவர் கிரேக்க நாட்டு உரை நடை இலக்கியங்களை நன்கு ஆராய்ந்தவராகக் காண்கின் முர். அவர் வாய்மொழியே துணைகொண்டு இந்நூலாசி ரியர் (அட்கின்ஸ்) கிரேக்க காட்டுப் பழைய பெரிய உரை நடைகளை நமக்குக் கொண்டுவந்து காட்டி, அவ்வுரை நடை இலக்கியங்களின் திறய்ைவு முறைகளையும் நன்கு விளக்குகிருர். அங்கிலேயில் அந்த மேலே நாடுகளில் கி. மு. 1. Literary Criticism in Antiquity, by J. W. H. ATKINS, M. A. 2. Dionysius of Halicarnassus. (Literary Criticism in Antiquity, p. 104.) - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/45&oldid=874634" இலிருந்து மீள்விக்கப்பட்டது