பக்கம்:தமிழ் உரை நடை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரை நடை? 37 நான்காம் நூற்ருண்டிலேயே நல்ல உரை கடைகள் தோன்றிச் சிறக்க வாழ்ந்திருந்தன. அவற்றின் கலம் கண்டு திறய்ைந்து தெளியும் வகையில் அவை ஏற்றமுற்றிருத்தன என்பதை நமக்கு உணர்த்துகிருர் ஆசிரியர். இந்த ஆய்வு வழி இவர் அக்காலத்தில் உரை நடை' எவ்வெவ்வாறு இருந்ததென்றும் எவ்வெவ்வாறு இருக்க வேண்டும் என்றும் காட்டுகிருர். பேசும் அல்லது எழுதும் உரைநடை நல்ல பொருள் பொருந்தினதாக, நல்ல நட்ையில் எடுத்த பொருளே நன்கு விளக்கிக் காட்டுவதாக அமையவேண்டும் என்பர். விளக்குவது உணர்வா சொல் நடையா என ஆயின், உரை கடையில் உணர்வே சொல் கடையினும் சிறந்ததாக விளங்க வேண்டும் எனவும் காட்டுகிருர். சொல்லழகு ஓரளவு தேவை என்ருலும் அழகுக்காகச் சொல்லடுக்குகளை உபயோ கித்துப் பொருள் நலம் இன்றேல் உரைநடை பயன்படாது என்பதை எடுத்துக் காட்டுகின்ருர். என்ருலும், சொல் செல்லும் முறையாகிய ஆற்ருெழுக்கு நடையோடு, கிலே கெடாத வகையில் உரைநடை இருக்கவேண்டிய அவசி யத்தை ஒமரது இலக்கியத்தின்துணை கொண்டு நன்குவிளக்கு கிருர். எப்படி ஒரு செய்யுளில் ஒரு சொல் கிலே கெடினும் ஓசையும் பொருளும் குறைந்து அவற்றின் இன்றியமை யாமையைக் காட்டுகிறதோ, அப்ப்டியே உரைநடையிலும் சொல்அமைப்பும் எழுத்தோசையும் இன்றியமையாது 1. Thus it is with great writers of the fourth century B. C. and earlier that he almost exclusively deals; and it is their work that he sets up as models for imitation. ( Literary Criticism in Antiquity. p. 112) 2, ibid. p. 113, 3. ibid. p. 115. 4. Literary Criticism in Antiquity p. 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/46&oldid=874636" இலிருந்து மீள்விக்கப்பட்டது