பக்கம்:தமிழ் உரை நடை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழ் உரை நடை இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிருர். சொற்கள் இத்துணை இன்றியமையாதன எனக் காட்டினும், அச்சொற். களே பொருள் பொதிந்தனவாக அன்றி வெற்றுச் சொற். களாக நிற்பின் பயன் இல்லை என்பதையும் கட்டுரை முழுதும் காட்டிக்கொண்டே செல்கிருர். அக்காலத்து எழுத்தாளர்களே அட்டிக் எழுத்தாளர்கள்’ எனக் குறிக் கின்றனர். இவ்வாறெல்லாம் ஆய்வு நிலை காணும் திறய்ைவாளரது காலம் கி. மு. 300 எனக் காண்கின்ருர்." இவ்வாறு அவ்வாய்வாளர் திறனேயெல்லாம் விளக்கி, அவற்றின் வழி இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்த கிரேக்க ரோம நாட்டு உரைநடை இலக்கியங்களே எடுத்துக் காட்டி, அவற்றின் தொன்மையையும் சிறப்பையும் விளக்கி, அவற்றை டயோனிசியஸ் பகுத்துப் பகுத்து நலம் காணும் நயங்களை விளக்கி, இன்னும் இலக்கியத் திறனயும் மேலைநாட்டு அறிஞர்கள் தங்கள் ஆய்வுக்கு அந்தப் பழம் பேரறிஞரைத் துணைக்கு அழைப்பதையும் சொல்லித் தம் கட்டுரையை முடிக்கின்ருர் ஆசிரியர். இந்நூலின் வழி மேலே நாடுகளில் 2000 அல்லது 2500 ஆண்டுகளுக்கு, முன்பே உரை நடை இலக்கியம் சிறந்து விளங்கியதென அறிகின்ருேம். இந்த உரை நடை ஆய்வுக்கிடையில் இங்கு மற்ருென் றும் கூறவேண்டியுள்ளது. இந்தக் கிரேக்க உரோம நாட்டு உரை நடைகளின் காலம் இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தியது என்பது திட்டமாகத் தெரிகின்றது. அக்காலத்தில் இந்த நாடுகள் தமிழ் நாட்டோடு வாணிபத் தொடர்பும் கலைகலத் தொடர்பும் பிற தொடர்புகளும் கொண்டிருந்தன. 1. Literary Criticism of Antiquity p 117. 2. Attic writers. 3. Lit Cri in Ant. page 133.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/47&oldid=874638" இலிருந்து மீள்விக்கப்பட்டது