பக்கம்:தமிழ் உரை நடை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இன்றைய உலகம் ஆராய்ச்சி உலகம். எதையும் ஆய்வுக் கண்ணுேடு காண வேண்டி மக்கள் உழைக்கின்ருர் கள். விண்ணையும் மண்ணையும் ஆராய்வதோடு, தங்கள் உணவு உடை முதலியவற்றின் தன்மைகளை ஆராய்வதோடு, தாங்கள் வாழும் நாட்டு வரலாறு, தாங்கள் பேசும் மொழி வரலாறு முதலியவற்றையும் ஆராய்கின்ருர்கள் அறிவுடை மக்கள். அவ்வாராய்ச்சிகளின் பயனக நாள்தோறும் பலப் பல புது நூல்கள் புதுப்புதுக் கருத்துக்கள்:தாங்கிப் பல்வேறு மொழிகளில் வந்துகொண்டே இருக்கின்றன. இந்திய நாட்டிலேயும் தமிழிலும் பிறமொழிகளிலும் எத்தனையோ புத்தம் புதிய நூல்கள் வெளிவருகின்றன. அவற்றுள் சில மொழி வரலாறு பற்றி ஆராய்ந்த கருத்துக்களைத் தாங்கி வருகின்றன. தமிழிலும் அவ்வாருன நூல்கள் வருதல் வேண்டும். * - - மொழி ஆராய்ச்சியாளர் திராவிட மொழிக் குடும்பமே பழமையானதென்றும், அக்குடும்பத்தே தமிழே தொன்மை வாய்ந்ததென்றும் கூறுகின்ருர்கள். அத்தொன்மைத் தமிழ் மொழியை அறிஞர் பல துறைகளில் பல வகைகளில் ஆராய் கின்றனர். தமிழ் பற்றி ஆராய அறிஞர் பலரது பெரு முயற்சி தேவை. பல ஆண்டுகள் பல துறைகளில் முயன்று ஆராயின், எத்தனையோ உண்மைகள் புலப்படும். அந்த முயற்சியில் நல்லறிஞர் பலர் முன்னின்று தமிழன்னையை அணி செய்யும் இந்நாளில் நானும் ஒரளவு அத்துறையில் முயல நினைத்தேன். அம்முயற்சியின் பயனே இச்சிறு நூல். தமிழில் பாட்டும் உரையும் தொல்காப்பியனர் காலத்துக்கு முன்பிருந்தே நாட்டில் நிலவி வந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/5&oldid=874642" இலிருந்து மீள்விக்கப்பட்டது