பக்கம்:தமிழ் உரை நடை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv எனினும், சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் உரை யினும் பாட்டே பலரால் போற்றப்பட்டு, பயிலப்பட்டு, நல்ல இலக்கியமாக வளர்ச்சியுற்றது. உரை தமிழில் இல்லையோ என்னுமாறு மறைந்துவிட்டது. இடைக்காலத் திலே சில பெருநூல்களுக்கு எழுந்த உரை நூல்களைத் தவிர்த்து, வேறு தனியான உரை நூல்கள் நாட்டில் உண்டாகவில்லை என்பதை அறிகிருேம். ஆனல், இன்று பாட்டினும் உரை நூல்களே நாட்டில் அதிகமாகப் பரவு கின்றன. இடைக்காலப் பா நூல்கள் பல இருந்தவிடம் தெரியாமல் மறைந்துவிட்டன. உரைநடை இடைக்காலத் தில் அதிகமாக வளராவிடினும், இன்று அது மிக அதிகமாக வளர்ந்து வருவதைக் காண்கிருேம். தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்த உரைநடை இடையிடையே நிலை கெட்டிருப்பினும் இன்று தலை நிமிர்ந்து உள்ள கராணத்தால் அதன் வளர்ச்சிபற்றி அறிய விரும்புதல் இயல்பாகும். அந்தத் துறையில் உரைநடை ஆராய்ச்சியில் கருத்திருத்தி யவர் மிகச் சிலரே. அவருள்ளும் திரு. செங்கல்வராயப் பிள்ளை அவர்களே ஆராய்ந்து ஆங்கிலத்தில் தொகுப்பாக ஒரு நூல் எழுதியுள்ளார்கள். ஒரு சிலர் சில் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். எனினும், தமிழில் தமிழ் உரைநடை பற்றி விளக்கமாக அன்று முதல் இன்று வரை உள்ள உரை நலம் கண்டு ஆராய்ந்து வெளி வந்த நூல் இல்லை. எனவே, அத்துறையில் கருத்திருத்தினல் நாட்டுக்கும் மொழிக்கும் பயன் உண்டு என்ற கருத்தால் இந்நூலை எழுத நினைத்தேன். தொல்காப்பியர் காலந்தொடங்கி இன்று வரை வளர்ந்த உரைநடைகளைக் காலந்தொறும் வகுத்து வைத்த முறையில் எடுத்துக் காட்டியுள்ளேன். உரைநடை என்பது என்ன என்ற ஆராய்ச்சியில் மேலைநாட்டுப் பேரறிஞர்கள் அது பற்றிக் கொண்ட கருத்துக்களை ஒரளவு காட்டியும், அவை தமிழ் உரைநடைக்கும் பொருந்தும் வகையினை விளக்கியும் உள்ளேன். வடமொழி தமிழொடு கலந்து உரைநடையில் பயில்வதைத் தனியாக எடுத்துக் காட்டியுள்ளேன். அழியா எழுத்துக்களாகிய கல்வெட்டுக்களைத் தனியாகப் பிரித்துள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/6&oldid=874728" இலிருந்து மீள்விக்கப்பட்டது