பக்கம்:தமிழ் உரை நடை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழ் உரைநடை முன்னிறுத்தி அவர் நமக்கு எடுத்து விளக்குகிருர். இவ்வாறு வாழ்வின் உண்மை உணர்வினை விடுத்து, தான் எடுத்துக் காட்டும் பாத்திரங்களையோ, பொருள்களையோ மெய்ம்மை நெறியில் காட்டும் வழி விட்டு ஆசிரியன் விலகிச் சென்று காட்டுவானுயின், அவன் வழி உலகம் செல்லாது என்ற உண்மையையும் அவர் விளக்கிக் காட்டத். தவறவில்லை. எனவே, உரைநடை என்பது வெற்று ணர்ச்சியாலோ, காலப்போக்காலோ தோன்றி மறையும் ஒரு விநோதப் பொருளாக அன்றி, உண்மை வாழ்வை உலகுக்கு உணர்த்தும் உயர்ந்த ஓர் இலக்கியமாகத் திகழ. வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். உரைநடைக்கும் பாடலுக்கும் வேறுபாடு உண்டா என்பதை ஆராய்ந்தனர் பலர். "ஆம், வேறுபாடு: தெரிகிறது. ஆயினும், என்ன வேறுபாடு என்பதைத் திட்டமாகச் சொல்லவும் கூடவில்லை. வெளித் தோற்றத் திற்கு வேறுபாடு உள்ளது போலத்தான் தெரிகிறது. பாட்டுத் தாளங்லேக் கேற்பத் துள்ளிச் செல்லும் சந்த முடைத்தாகக் காண்கிறது. உரைநடை அவ்வாறு இல்லை. எனினும், ஓசை உடைமை அற்ற தென்றும் கூறமுடியாது. செய்யுளே மட்டும் பாட்டு என்றே வரையறுக்க இயலாது. உரைநடையும் செய்யுளினத்தைச் சார்ந்ததாகும். சீரும், தளையும், அடியும், தொடையும் அமைந்திலவேனும், உரைநடையும் செய்யுளின்பாற்பட்டதேயாகும். அதற். கென அமையும் ஓசை உடைமையும், ஆழ்ந்த கருத்தை விளக்கும் நிலையும், நல்ல தெள்ளிய நடையும் இல்லாமல் இல்லை. நம் உளநிலையை ஒட்டியே உரையும் பாட்டும் பகுக்கப்பட வேண்டும் போலும் இரண்டுக்கும் தோற்ற நிலையில் வேறுபாடு காணப்படுகிறது. தரைக்கும் கடலுக்கும் 1. Some Principles of Literary Criticism pe 308,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/57&oldid=874721" இலிருந்து மீள்விக்கப்பட்டது