பக்கம்:தமிழ் உரை நடை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரை நடை? 55 தொடர்மொழி கொண்ட உரைநடை படிப்போரைக் குழப்பும் என்கிருர்'. மேலும், சொல் பயன்படும் வகை யையும் அவர் விளக்கத் தவறவில்லை. இச்சொற்கள் பற்றி அவர் கூறும்போது நாமும் நம் தமிழ் உரை கடையை எண்ணிப் பார்க்கத் தோன்றுகின்றது. தமிழில் எளிய சொற்கள் இருக்கவும், அவற்றை விடுத்துத் தேவையில்லா வடமொழிச் சொற்கள் போன்றவற்றை வலியப் புகுத்தும் நல்லோர் சிலர் தமிழை வளர்ப்பதாகக் கூறிக்கொள்ளுகின்றனர். மாருகச் சிலர் இல்லாதவற் றிற்கெல்லாம் எங்கிருந்தோ தோண்டிப் புதுச் சொற்கள் காண்பதாகக் கூறிக்கொண்டு, எடுத்த பொருளே விளக்க முடியாது இடர்ப்படுகின்றனர். இப்படி இரு துருவங் களாய் இருசாரர் இருப்பது மொழி வளர்ச்சிக்கு ஊறு செய்வதேயாகும். இக்கொள்கையை அவர் நன்கு கண்டிக் கிரு.ர். சொற்கள் உபயோகிப்பதிலும் உரையாசிரியன் தகுந்த சொற்களை உபயோகிக்கப் பழகவேண்டும். ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருந்தாலும், அவற்றை உபயோகிக்கும் இடமறிந்து உபயோகித்தல் வேண்டும். பேசு, உரை, அறை, விளக்கு, கூறு, செப்பு என்பன போன்ற பலசொற்கள் எடுத்துக்காட்டிப் பேச இருப்பினும், அவற்றை இ ட ம றி ங் து உபயோகிக்கவில்லையானல், அவற்ருல் பெறப்படுகின்ற உண்மைப் பொருள் விளங்கா மற் போகுமன்ருே? உரைநடையில் உயரிய மொழிகளையும் தொடர்களே யும் உபயோகிக்க வேண்டுவதே முறையாகும். கல்ல 1. The Critical Sense, pp. 50 & 51 2. It is a pity to be a fanatic on either side, for either fanaticism narrows the possibilities of Language (The Anotomy of Prose. p. 11) - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/64&oldid=874740" இலிருந்து மீள்விக்கப்பட்டது