பக்கம்:தமிழ் உரை நடை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ் உரை நடை யும் எழுதிக்கொண்டு செல்கின்றனர், இது தவிர உரை கடையைப் பற்றி ஒன்றுமே இல்லை. சிலப்பதிகார உரைப் பாட்டு நடையும், பாட்டு உரை நூலே என்ற தொல் காப்பியர் எடுத்துக்காட்டும் உரைநடையும் அவர்களுக்குப் புலப்படாதிருத்தல் வியப்பே யன்ருே! இப்படித் தமிழ் நாட்டில் உருவாகும் ஒரு கலைக்களஞ்சியத்திலேயே ஆயிர மாயிரமாண்டுகளாக வரும் உரைநடை பற்றிய விளக்கம் இல்லை என்ருல், பின் வேறு யாரே உரைநடையை உலகுக்குக் காட்ட வல்லார்? அதுவும் உரைநடை நூல்கள் பல்கிப் பெருகும் இந்த இருபதாம் நூற்ருண்டில் இல்லை. என்ருல், என்று காட்டுவது? இனி அடுத்து வரும் பகுதி களிலாவது வேறு தலைப்பிலாவது இது பற்றி விளக்கம் வருகிறதா என்று தமிழ் மக்கள் பொறுத்துப் பார்க்க வேண்டுவதுதான். - - திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அவர்கள் "தமிழ் வியாசங்கள்' என்னும் தமது நூலில் வசனம்' பற்றி எழுதியுள்ளவை தமிழில் உரைநடை வழங்கும் கிலே பற்றி விளக்குவதோடு, அவர் தாம் கைக்கொண்ட உரை நடை எத்தகையதாய் அமைந்துள்ளது என்பதையும் காட்டுமாதலால் அதிலிருந்து ஒரு பகுதியை அப்படியே எடுத்துத் தருகிறேன். - - "யுரோபிய பாஷைகளில் சிறுவர் சிறுமியரும், எழுத்து வாசனையுள்ள கூலியாட்களும் ஓதலான வசன நூற்கள், எளிய கடையில் எழுதப்பெற்று, நாளுக்குநாள் மல்கி வருகின்றன. கல்விமான்களான ஆண் பெண் பாலினர் ஆயுள் முழுவதும் படித்து வந்தாலும் படித்து முடியாத அளவாகப் பல திறப்பட்ட வசன நூல்கள் ஏற். பட்டிருக்கின்றன. அவைகளில், அவரவர் தங்கள் மனப் போக்கினுக் கேற்றவைகளைத் தேர்ந்தறிந்து வாசிப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/67&oldid=874746" இலிருந்து மீள்விக்கப்பட்டது