பக்கம்:தமிழ் உரை நடை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழ் உரை நடை மதுராபுரித் தெய்வம் கட்டுரைத்த காரணத்தினலேதான் இது கட்டுரை காதை எனப் பெயர் பெற்றது எனக் கொள்ளல் பொருந்தும். இம்முறை நோக்கினல், கட்டுரை என்பது உரை நடையை மட்டும் குறிப்பதன்று என்பதும். இன்றை இட்டுக் காட்டிச் சொல்லும் வகையில் அமைந்த. தென்பதும் கொள்ளல் வேண்டும். எனவே, சிலப்பதி காரத்தில் வரும் கட்டுரை அனைத்தும் உரை நடை என்று கொள்ளல் பொருந்தாது என்பது தெளிவு. இக்கட்டுரை என்பதற்குப் பொருள் பொதிந்த சொல், என உரை எழுது கின்ருர் க. மு. வே. நாட்டார் அவர்கள். (நாட்டார் உரை பக். 475). அப்படிப் பார்ப்பின், இதில் வரும் கட்டுரை களெல்லாம் கூறிய பொருளைத் தொகுத்துப் பொருளைப் பொதிந்து வைத்தனவாகவும், மதுராபுரித் தெய்வம் கூறியது. பொருள் பொதிந்த வாசகம் எனவும் கொள்ளல் பொருந்து வதாகும். எனினும், மேலே கண்டபடி உரைபெறு: கட்டுரை உரைப்பாட்டு மடை போன்றவை வாசகமாகிய வசனத்தை (Prose) இடைபெற் றியங்குவன என்பதும் தெரிகிறது. - ஆய்ச்சியர் குரவையில் கருப்பம், எடுத்துக் காட்டு என்ற இரு பகுதிகள் உரை நடைகளாகவே வருகின்றன. இவற்றில் சில தனிச் சொற்களும் இடம் பெறுகின்றன. குரவைக் கூத்தாடுவதன் அவசியத்தை எடுத்துக்கூறி இடைக்குல மாதரை அழைக்கும் முறையில் அமைகின்றது. கருப்பம். - 'குடத்துப்பால் உறையாமையும், குவி இமில் ஏற்றின் மடக் கண்ணிர் சோர்தலும், உறியில் வெண்ணெய் உருகாமையும், மறி முடங்கி ஆடா மையும், மால் மணி நிலத்து அற்று வீழ்தலும், வருவது ஓர் துன்பம் உண்டு என மகளை நோக்கி, மனமயங்காதே! மண்ணின் மாதர்க்கு அணியாகிய கண்ணகியும் தான் காண, ஆயர்பாடியில் எரு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/83&oldid=874771" இலிருந்து மீள்விக்கப்பட்டது