பக்கம்:தமிழ் உரை நடை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரை நடையில் ஒரு மைல் கல் 81 எளிமை வாய்ந்த நடையே தூய்மையானது எனக் குறிக் கின்ருர், அதற்கு ஆக்ஸ்போர்டு அகராதியைத் துணை கொள்கின்ருர். Chaste' என்ற சொல்லுக்கு Simple, unadorned போன்ற பொருள்கள் அதில் கூறப்பட்டிருப் பதை எடுத்துக்காட்டுகின்ருர். அதே சொல்லுக்கு இவ் 6?grøör@ @FT|Ögåbrå ön plapgör pure, vigin, restrained போன்ற பொருள்களும் இருப்பதைக் காட்டவில்லை." பிறமொழி கலந்தாலும் தவறில்லை; எளிமையாய் இருப்பதே மொழிக்கு அழகு, என்கிருர் அவர். ஆயினும், பிற மொழிக் கலப்பின்றி எளிமையும் கூடினல் பொன் மலர் நாற்ற முடைத்தாகாதா? இந்த நிலைகொண்டு பார்த்தால் இறையனர் களவியலுரை எளிமை இல்லாத கிலேயுடன் வடமொழிக் கலப்பையும் மிகுதியாகப் பெற்ற நிலை எண் ணத்தக்கதுதான், இனி அதன் காலம் எட்டாம் நூற்ருண்டு என்பது பொருந்துமா என்பதைக் காண்போம். இறையனர் களவியல் உரையை எட்டாம் நூற்ருண் டிற்குக் கொணர்ந்தால், நக்கீரரும் அந்த நூற்ருண்டிற்கு உரியவராகி விடுவரே என்று அஞ்ச நேரிடும். அதன் வழி கடைச்சங்க காலமே மாறும் நிலை உண்டாகு மல்லவா? ஆயினும், உரைவழி நோக்கின் அவ்வாறு எண்ணத் தேவையில்லை. அதில் உரை எவ்வாறு வளர்ந்து வந்தது என்பதை ஒரு பகுதி நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. அதைக் காண்போம். உரை நடந்து வந்த முறை இதுதான்: 'மதுரைக் கணக்காயனர் மகனர் நக்கீரனர் தன் மகளுர் கீரங்கொற்றனருக்கு உரைத்தார்: அவர் தேனுர்கிழாருக்கு உரைத்தார்;அவர் படியங் கொற்றனருக்கு உரைத்தார்; அவர் செல்வத் தாசிரியர் பெருஞ்சிவர்ைக்கு உரைத்தார்; அவர் 1. Oxford Dictionary, p. 188. 6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/90&oldid=874779" இலிருந்து மீள்விக்கப்பட்டது