பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 த. கோவேந்தன்

இவ்வாறு இணைந்துவரும் கொம்புகள் சுழியுள்ள எழுத்துகளாம் ல, ள, வ, ன, ண என்பவற்றோடு மயங்குதற்கு இடம் உண்டு ஆதலின் அவற்றின் முன்னே மேலே சுழியை எழுதி, அதனை வளைத்து, இந்த எழுத்துகளோடு ஒன்றாகும் வகையில் சேர்த்து, ஐ என்ற குறியமைய இன்று எழுதி வருகின்றனர் ஒரு சிலர் பழமையைப் பின்பற்றி இரண்டு கொம்பினையே தனித்தனி எழுதி ஐயைக் குறிக்க வகை செய்கின்றனர்

கை=ெெக என்றாகும். கை என்பது கய் என்று ஒலிக்கும் கெய் என்பது அதன் ஒலி என்பர் கால்டுவெல் க என்பது ச என மாறுவதும் உண்டு. செய் என்ற வினையடியாகப் பிறந்ததே சே என்னும் தெலுங்குச் சொல்; அங்குக் கை என்பதே அதன் பொருளாம் கை என்பது கெய் என ஒலித்தல் வேண்டுதலின், அது செய் என்பதன் பழைய தமிழ் வடிவம் என்பார் கால்டுவெல் ஆனால் கைப்புகய்ப்பு-கசப்பு என வருதல் காண்க இங்குக் கெய்ப்பு என எவரும் ஒலிப்பதில்லை H என ஒலித்த பழைய தமிழ் ஒலியையும் அ என எழுதியதால் அந்தப் பழைய ஒலி மட்டும் அ என எழுதப்பெற்றபோதும் எ என்றே ஒலிக்கும் எனவே, கை என்பது பழைய தனி ஒலி அன்று என்பாரும் உண்டு. கை என்பது இரண்டு மாத்திரையாக ஒலிக்கின்ற இடம் பழந்தமிழில் வருவது உண்டு இக்கொள்கைப்படி இங்கு எல்லாம் கய் எனக் கொள்ளுதல் வேண்டும் போலும் கை என்பதனைத் தமிழ்ச் சிறப்பொலி என்பாரும் உண்டு

பொருள்: செயற்கை முதலிய சொற்களில் கை என்பது தொழிற்பெயர் விகுதியாகவும், கசப்பு என்ற பொருளி லும், கை என்ற உறுப்பின் பெயராம் பொருளிலும், கைக் கிளை முதலியவற்றில் ஒருமருங்கு என்ற பொருளிலும், கைக்குட்டை முதலிய சொற்களில் சிறுமை என்ற பொருளிலும் பெயராயும் வழங்கிவரக் காண்கிறோம்