பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 த. கோவேந்தன்

பத்தி 4 பல்லவ அரசனான முதலாம் பரமேசுவரன் உடைய கூரம் செப்பேடுகள் சுமார் கி பி 680.

பத்தி 5. பல்லவ அரசனான இராசசிம்மனுடைய கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் கல்வெட்டுக்கள் கி. பி. எட்டாம் நூற்றாண்டின் முதற்பாகம்

பத்தி 6 பல்லவ மல்லனான இரண்டாம் நந்தி வர்மன் உடைய கசாக்குடிச் செப்பேடுகள் சுமார் கி பி 755. இதுவும் சித்திரித்த வகையே

பத்தி 7. அதே அரசனுடைய தண்டந்தோட்டம் செப்பேடுகள். சுமார் கி பி 790

பத்தி 8. மதுரையிலிருந்து ஆண்டுவந்த பாண்டிய மன்னனான சடிலவர்மன் பராந்தகனுடைய வேள்விக் குடிச் செப்பேடுகள். கி பி எட்டாம் நூற்றாண்டின் கடைசிப்பாதம்.

பத்தி 9, அதே அரசனுடைய சென்னைக் கண்காட்சி சாலையில் உள்ள வேலங்குடிச் செப்பேடுகள்

பத்தி 10. சுந்தரசோழனுடைய அன்பில் செப்பு ஏடுகள் சுமார் கி. பி. 960.

பத்தி 11. பாண்டிய மன்னனான இராசசிம்மன் உடைய பெரிய சின்னமனுர்ச் செப்பேடுகள் கி. பி பத்தாம் நூற்றாண்டின் முதற்பாதம்.

பத்தி 12 முதலாம் இராசராச சோழனுடைய காஞ்சீபுரம் கல்வெட்டு கி பி 1012

பத்தி 13 முதலாம் இராசேந்திர சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடுகள். சுமார் கி. பி. 1025

பத்தி 14 விக்கிரம சோழனுடைய செவிலிமேட்டுக் கல்வெட்டு கி. பி. 1134

பத்தி 15. பாண்டிய அரசனான சடாவர்மன் சுந்தர பாண்டியனுடைய பூரீரங்கம் ரங்கநாதர் கோயில் கல்வெட்டு. சுமார் கி. பி. 1260.