பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 த. கோவேந்தன்

ஐந்து, இவை வடமொழியில் உள்ளன. ஒரு வியப்பு இவை பழந்தமிழின் எதிரொலியாகும்

இது காரணமாக முதலில் வந்த மொழியாராய்ச் சியாளர்கள், வடமொழிதான் ஆதார மொழி என்று சொல்லாவிட்டாலும், தமிழே ஆதார மொழியினின்று முதன் முதலில் தோன்றிய மொழியாக இருக்க வேண்டுமென்று கருதினார்கள் எனவே வடமொழி இலக்கணத்தை ஆதாரமாகக் கொண்டு மொழியா ராய்ச்சி நூலை ஏற்படுத்தினார்கள்

ஆனால் வடமொழியிலுள்ள உயிரெழுத்துகள் கிரேக்க மொழியிலுள்ள உயிரெழுத்துகளைவிட மிகக் குறைவு இந்தோ ஜெர்மானிய ‘அ’, 'எ', 'ஒ', இவை வடமொழியில் 'அ' என்னும் ஒர் ஒசையாகப் பரிணமித்திருக்கின்றன மெய்யெழுத்துக்களும், இந்தோ ஐரோப்பிய மொழியில் உள்ளபடி, அப்படியே இல்லை இவை நமக்கு இப்பொழுது தெளிவாக இருக்கின்றன இருந்தாலும் மொழியாராய்ச்சியாளருக்கு வடமொழி மிகவும் பயன்படுகிறது ஆதார மொழியின் மிகப் பழைய உருவத்தை மறுபடி அமைக்க வடமொழி அவர்களுக்கு உதவுகிறது தமிழை முதன் தாய்மொழி என்று கருதிஆயாமல் விட்டதால் வந்த முடிபு இது

ஆங்கிலமோவெனின், ஆதாரமொழியிலிருந்து வெகு தூரம் பிரிந்து பழைய உருவத்தில்கூட (Old English) இந்தோ ஐரோப்பிய உயிர்களும் மெய்களும் அதிக மாறுபாட்டை அடைந்திருக்கின்றன. பெரும்பாலும் இலக்கண உருபுகள் மறைந்துவிட்டன. இப்பொழுது உள்ளவை: மூன்று வேற்றுமைகள், இரு எண்கள், மூன்று பால்கள், இரண்டு காலங்கள், இரண்டு வினை வகைகள் (Voices), இரண்டு வினையாட்சி (Moods) பெயர்ச் சொற்களுக்கு மாத்திரம் பன்மையில் (e)'s என்ற