பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 த. கோவேந்தன்

வட்டெழுத்து : து என்பதன் வடிவத்தில் வலப்புற வளைகோடு முடியும் இடத்திலிருந்து கோணமாக வைத்த ட போன்ற வடிவம நெடிலின் குறியாகப் பிற எழுத்துகளில் அமைவதுபோல இங்கும் அமைவதால் து என்ற வடிவம் எழுகின்றமையால் காண்க

பொருள்: 'து' என்பது தூய்மை, வெண்மை, வன்மை, பற்றுக்கோடு, பகை, தசை, துரவி என்ற பொருளில் பெயராயும், இகழ்ச்சிக் குறிப்பு, நண்பு சிதைந்ததெனும் குறிப்பு முதலிய பொருளில் இடைச் சொல்லாயும் வரும். பிந்திய குறிப்பு டு என்பதன் திரிபு போலும்.

ஒரெழுத்தொருமொழியிலன்றி ஈற்றில் இது வாராது வந்துது’ என்பது போலப் புணர்ச்சியின் பயனாகத் தொடர்மொழியிலும், ‘என்பது உம் என்பது போல அளபெடை எழுந்த சொல்லிலும் அன்றி மொழியிடையில் வாராது மொழிக்கு முதலில் வரும் போது து, தூகு, தூசு, துரவு, தூங்கு துறு, தூது, தூம்பு, துரவி, தூண்டு, தூணி, தூள் முதலியவற்றின் அடியாகப் பிறந்த சொற்களன்றிப் பிற சொற்கள் எல்லாம் பிறமொழிச் சொற்களாம் த்வம்சம் என்பது தூங்கிசம் என வருவது போன்றவற்றில் "த்வதது என விளங்கல் காண்க.

த்+எ என்ற இரண்டெழுத்தினை ஒன்றாகக் காட்டும் உயிர் மெய் எழுத்து (பார்க்க : த; எ) வடிவம் : மெய்யெழுத்தின் இடப்புறத்தில் சிறு குறுக்குக் கோடாக ஒட்டிக் கிடப்பதான எகரக்குறி, இடையில் வளைவுபெற்றுப் பின் முனையிலும் வளைவு