பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 த. கோவேந்தன்

தர்வி, தரிசனம் முதலிய வடசொற்கள் தமிழில் தெ என்று தொடங்கி வழங்குகின்றன த=தெ என மொழி முதலில் வரல் காண்க தெய்வம் என்பதும் வரும் தே-தெய் தே என ஆம் திவ்ய என்பதும் தெவ்வு என்றாம் என்பர் ரகரம் தகரமாதலும் காண்க (ரட்சகன்+தட்சகன்) சகரமும் தகரமாதலும் உண்டு செட்டி = தெட்டி, தெகிடி என்ற உருதுச்சொல்லும்,த்ெல்லுப்பு,தெலுகு (தெலுங்கு), தப்ப முதலிய தெலுங்குச் சொற்களும் தெ முதலாக வழங்குதல் காண்க திம்ம என்பதிலிருந்து வருவது தெம்மாடி என வழங்குதலும் காண்க. தெக்கு (தெவ்+கு), தெவிடு, தெகிட்டு (தேக்கிடு?), தெகிழ் (திகழ்?), தெகுடல், திகழ், தெங்கு (தென்+கு), தெப்பம் (தெவ்), தெள், தென்கு, தெழ்கு, தெட்கு (தெள்தட்டு), தெண்ணீர் (திண்னர்), தெத்து (தெற்று), தென்னை, தெய்ய, தெய்யோ, தெவ், தெம்முனை (தெவ்+முனை),தெரி, தெருள், தெல் (தில்லு), தெழி, தெளி, தெரளி, தெறி, தென்னை, தெக்கி, தெற்கு, தென, தென்படு, தென்று முதலியவும் இவற்றின் அடியாகப் பிறப்பனவும் தமிழ்ச் சொற்கள் எனலாம் தெத்தே, தெந்தன, தென்ன என்பவை ஒலிக் குறிப்பாக வரும் தே குறுகித் தெ என நிற்பதும் உண்டு தெகுடிகை (தேள்கொடுக்கி), தெம்பு (தேன்+பு), தெம்மாங்கு, தெம்மாங்கு (தேன்+பாங்கு), தென்மொழி (தேன்மொழி), தென்னி(தேன்.வாழை) முதலிய காண்க

இது த்+ஏ என்ற இரண்டும் சேர்ந்த உயிர்மெய்எழுத்து. (பார்க்க : த ஏ)

வடிவம் : எ, ஏ என்பவை வேறுபடாமல் எழுதப் பெற்றமை முன்ன்ரே குறிக்கப் பெற்றது (பார்க்க : எ, ஏ,