பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 த. கோவேந்தன்

ஆடிமூத்தவள் என்றாம்) முதலியனவும், தெலுங்கு முதலிய வழியாக வந்த பிறவும், இவற்றின் வழியாக அமைந்தனவும் வடமொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கக் காண்கிறோம். இங்கே, h= க; tr=t, dr=த (ரகரக்கேடு); ல=ள ய=ழ, d=த (=த இடையில் ஷ கெடல் முதலிய மாறுதல்கள் காண்க

தோகிலி (தோசினி=ஊழியச் சுதந்திரமாகத் தரும் இருவகைத் தானியம்; இங்கே dva என்ற வடமொழியின் திரிபு உண்டு போலும்); தோது (பொருத்தம்); தோரத்தம் (நிர்ப்பந்தம்); தோத்தை (இருகை அளவு போலும்); தோம்தர், தோம்தரா (கொசுவலை); தோவத்தி (தோதவத்தி, துவைத்தது என்று பொருள்படும். dhauta வடமொழி என்பர், துணி என்று பொருள்). தோம்பு (சிவப்பு); தோசை (அப்ப வகை); தோண்டான் (ஓநாய்) முதலியன தெலுங்கிலிருந்து வந்தவையாகக் கருதப் படுபவை. தொண்டான், பழைய மெல்லொலி யோடு வழங்குதலின், பண்டைய தமிழ்த் திசைச்சொல் வழக்காகலாம். தோசை’ இன்று பெரு வழக்கிற்று. இவற்றில் சில வடமொழியுமாம். இங்கேdhau=தோ, ல=ள என வரல் காண்க. 'ன்' ஆண்பால் குறியாது வருதலும் காண்க. தோல்தனம் முதலிய வழக்கும், தெலுங்குத் தொடர்பாகலாம். தோரமலி, தோராவல்லி (ஒர் அணி), தோடை (கிச்சிலி) முதலியன சிங்களமாம்.

தோகை, தோடு, தோடை, தோட்டம், தோட்டி (பலபொருள் உண்டு. இதனை வடமொழி என்பாரும் உண்டு), தோண்டு, தோண்டி, தோணி, தோப்பு (தொகுப்பு), தோப்பி (நெற்கள்), தோய் (வினைச்சொல்), தோல் (தோல்வி, பழமை, உரி), தோழ் (தொழு, கூட்டம், தொழுதல்), தோழம் (கடல் பேரெண்; வெள்ளம், சமுத்திரம் என்பனவும் பேர் எண் ஆதலைக் காண்க), தோழன், தோழி, தோள் (வினைச்சொல்; பெயர்ச்சொல்) தோறும் (தொறு) முதலியன தமிழ் அடிச் சொற்களாம்