பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 த. கோவேந்தன்

தமிழ் நெடுங்கணக்கில் 'க' முதலாக வரும் மெய்யெழுத்துகளில் இது பதினோராம் எழுத்து, 'ம' என்பதற்குப் பின் வரும் ய, ர, ல, வ, ழ, ள என்ற ஆறும் இடையெழுத்துகளெனத் தமிழில் வழங்கும் வல் லெழுத்துப்போல் வனமையுமாகாமல், மெல்லெழுத்துப் போல் மென்மையும் ஆகாமல், இடை நிகரணவாய் நிற்பதால் இடை யெழுத்தென்ற பெயர் வந்ததென இலக்கணப் புலவர் கூறுவர். உயிரெழுத்திற்கும், மற்றைய மெய்யெழுத்திற்கும் இடைநிகரணவாய் நிற்பன என்று கொண்டு இவற்றை அரை உயிர்கள் என்று மேனாட்டார் வழங்குவர். இவற்றைப் பிறப்பு வகையாலோ, செவி யுணர் ஒலி வகையாலோ ஓரினமாகக் கொண்டு ஆராய்வது அருமையென்று இந்நாளைய பேச் சொலி யியல் அறிஞர்கள் கருதுவர்

எழுத்தொலிகளை அலகு பெறுவன’, ‘அலகு பெறாதன என்று யாப்பு நூலறிஞர் வேறு பிரிப்பர். 'அலகு பெறுவனவற்றை மேனாட்டார் 'அசை ஒலிகள்’ என்பர். இவை உயிரெழுத்துக்களம், அளபெடை பெற்ற மெய்யெழுத்துகளுமாம். பிற ஒலிகள் அலகு பெறாதன ஆம் இவையே மெய்யெழுத்துகளாகும். இவற்றிலே மூச்சு வரு வழி முழுதும் அடைபட்ட ‘மூடுமெய்கள் ஒரு வகை. அவ்வழி ஒரு சிறிது திறந்த திறப்பு மெய்கள் ஒரு வகை. இத்திறப்பு மெய்களும், ஒலிப் பொலிகளாகவோ, ஒலிப்பிலா ஒலிகளாகவோ அமையலாம். இங்கும் மூடுமெய்களைப் போலத் தொடக்கநிலை, பிடிப்பு நிலை, விடுநிலை என மூன்று கூறுகளைக் காணலாம். இவற்றின் பிடிப்பு நிலையில், மூடுவதற்கன்றி ஒரு சிறிது