பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 195

இது இடையெழுத்துகளில் மூன்றாவது; மெய் யெழுத்துகளில் பதின்மூன்றாவது. மேலண்ணத்தின் இடையில் பல்லை யொட்டித் தடை யெழுவது இவ்வொலியின் பிறப்பில் நாம் காணும் சிறப்பியல்பாகும் ஆனால் அந்தத் தடையின் இருபுறத்தும், பற்களின் ஊடேயும், இதழ்களின் ஊடேயும் உள்ளெழுவளி புறத்தே போக இடமுண்டு இவ்வொலி பிறக்கும்போது நாக்கின் ஒரம் பரந்து, அருகேயுள்ள பற்களில் ஏறி, வீங்கி ஒற்றி நிற்கும் என்பர் அண்பல் முதலை நா விளிம்பு வீங்கி ஒற்ற லகாரம் பிறக்கும்’ (தொல், ஏழு. பிறப்பு-14) என்பது இலக்கண நூல் இங்கும், இருபுறத்தும் வளிபுறத்தே ஒட இடமுண்டு. தமிழில் இந்த ஒலி குற்றியலுகரத்தின் சாயல் பெற்றிருக்கக் காணலாம். வட்டில் என்பது வட்ல் என ஒலிக்கும்போது இது புலனாகும் இந்த லகரம் வல்லெழுத்துப் பின்வரக் கற்பு முதலியவற்றைப் போலவோ, கற்குறை என்பது போலவோ, அப்பின்னொலியோடு ஒன்றி நிற்கும்போது றகரமாக மாறுமென்பது தமிழ் இலக்கணக் கொள்கை -

இத்தகைய இடங்களில் ஒலிப்பொலியாக உள்ளது பின்வரும் ஒலிப்பிலா எழுத்தின் சாயல் பெற்று, ஒலிப்பிலா எழுத்தாக மாறக் காண்கிறோம் அதற்கு ஏறக்குறைய ஒத்த ஒலியாக றகரத்தை எழுதி வந்தனர். பிற்காலத்தே லகரத்தை எழுதி, அதன் பின்னர் வருகின்ற வல்லெழுத்தை இரட்டித்து எழுதும் வழக்கம் தென்னாட்டுக் கையெழுத்துச் சுவடிகளில் பெரு வழக்காகப் பயின்று வரக் காண்கிறோம் மலை யாளத்தில் இதுவே இலக்கண விதியாகவும் அமைந் துள்ளது கட்ல், வட்ல் என்பன போன்ற சொற்களில்