பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 த. கோவேந்தன்

சிலபோது டகரத்தை ஒலித்த பின் லகரத்தை ஒலிக்க வாராமல் தகரத்தையே ஒர ஒற்றொலியாக ஒலிப்ப துண்டு ஆனால் பெரும் பான்மையும் இவற்றிடையே குற்றிய்லுகரம்போன்ற ஒரு மூச் சொலியும் கேட்ப துண்டு. யகரம் பின்வரும்போது லகரம் இகரச்சாயல் பெற்றது போலச் சிறிது சுரம் மிக்கு ஒலிக்கக் காணலாம் இந்த இடங்களில் இடையே யகரத்தை இட்டு எழுதுவதே வழக்கமாகிவிட்டது. பல்யாது-பல்லியாது. ஆனால் பிற இடங்களில் உகரமிட்டு எழுதக் காண்கிறேம்: பல்-பல்லு. லகரம் தமிழில் மொழிக்கு முதலாகவில்லை. லகரத்தின் பின்னே உகரமோ ஒகரமோ வருமானால், லகரத்தின் முன் உகரத்தை முன் வைத்தொலிப்பதே பழைய வழக்கம்: உலூகம்-உலோகம் லகரத்தின் பின் அகரம் வரும்போது அதில் எகரக்கூறு இருப்பதுபோலத் தமிழர்க்குத் தோன்றியது போலும், லெட்சுமணன் என்று ஒலிப்பது காண்க. எனவே லகரத்தின் பின் இத்தகைய அகரம் வந்தாலும், இ, ஈ, எ, ஏ, ஐ முதலியன வந்தாலும் முதலொலியாக இகரத்தையே அமைத்து வழங்கினர்: இலேசு, இலயம், இலக்குமணன். லகரம் மொழிக்கு ஈற்றில் வரும். ஆனால் இடைக் காலத்திலி ருந்து பெரும் பான்மையும் நகரம் நீங்கலாகப் பிற ஈற்றுமெய்யெழுத்துகள் பின்னே உகரத்தைப் பெற்றே ஒலித்து வரலாயின. பல்-பல்லு; சொல்-சொல்லு (யகர ஈறு ஈற்றில் இகர ஈறாகவோ, இகர ஈறு பெற்றே ஒலிக்கும்:-தாயி-தாஇ). மொழிக்கு இடையில் வல் லெழுத்தின்முன் றகரமாதலை முன்னரே கண்டோம்.

அவ்வாறு ஒன்றிவாரா நிலையில் லகரத்தின் பின்னர், க, ச, ப, வ, ய என்ற மெய்யெழுத்துகள் மட்டுமே மயங்கிவரும். பிற எழுத்துகளோடு மயங்காமையால் லகரத்தின் முன் தகரம் வந்தால் லகரமும் றகரமாகும். தகரமும் றகரமாகும். லகரத்தின் முன் நகரம் வந்தால் லகரமும் மெல்லெழுத்துச் சாயல் பெற்று னகரமாகும்