பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 205

பகரவகர வேறுபாடின்றிப் பகரமே வருதலால் அந்தப் பகரமே, பிற்காலத்தில் மேலே காட்டிய வருமிட வேறுபாட்டால் பகரமாகவும், வகரமாகவும் திரிந்த தெனலாம் ஆதலின் இன்றுளதுபோல முன்னரே வருமிடவேற்றுமை இல்லாமையால் அவ்விடங்களில் பகரமேயன்றி வகரம் வந்திருக்க இடமில்லை வான், பான் என்றும், வி, பி என்றும், பு, வு என்றும், ப், வ் என்றும் வரும் எதிர்கால இடைநிலைகள் ஈரேவல் விகுதிகள்: தொழிற்பெயர் விகுதிகள் பகர வடிவாகவே பான், பி, பு, ப் என்று வழங்கியிருத்தல் வேண்டும்.

உயிர்மெய்ம் மயக்கத்தில் மெய்யெழுத்தில் தொடங்கி வரும் தனிக்குறிலின்பின் உள்ள வகரம் உயிர்வரின் இரட்டும், (உ-ம்) அவ்+இடை=அவ்விடை பிற இடங்களில் உயிர் வகரத்தின் மேலேறி உயிர் மெய்யாகும் -

மெய்யெழுத்தோடு மெய்யெழுத்துத் தனிமொழிக் கிடையிலும், புணர்மொழிக்கிடையிலும் வரும் மயக்கத்தைக் கூறும்போது வகரத்தின் பின்னால் யகரம் ஒன்றே வருமென்பர். யகரம் முதலான சொல்லுறப் போன்று மில்லாமையால் இவ்விதி புணர்மொழிக் கென்றே கொள்ளலாம். பிற்காலத்தில் வகர ஈறு உகரச் சாரியை பெற்றதனால் இம்மயக்கத்திற்கு இடமில்லாமற் போய் விட்டது. உகரச் சாரியை பெற்றபோதும் யகரத் தின் முன்னர் அவ்வுகரம் இகரமாக மாறியது. (உ-ம்) தெவ்வியாது. எனவே அவ்யாது முதலியனவாக இலக்கணத்தில் வரும் எடுத்துக்காட்டுக்களில் மட்டுமே பிற்காலத்தில் இம் மயக்கத்தைக் காணக்கூடும். வல்லெழுத்துப் பின் வந்தால் வகரம் ஆய்தமாகி மங்கும் (உ-ம்) அவ்+கடிய=அஃகடிய மெல்லெழுத்து வந்தால் வரும் மெல்லெழுத்தாக வகரம் மாறும் (உ.ம்) அவ்+நாழி=அந்நாழி.