பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 த. கோவேந்தன்

11 II-1 b குலோத்துங்க சோழனுடைய திருக்கழுக்குன்றச் செப்பேடுகள் கி பி 112

12 III-ம் குலோத்துங்க சோழனுடைய திருக்களர்ச் செப்பேடுகள். கி பி 1204

13 இராச நாராயண சம்புவராயனுடைய குன்றத்துர்க் கல்வெட்டு கிபி 1343

14 விஜய நகர அரசன் அச்சுத தேவராயனுடைய பூரீரங்கம் கல்வெட்டு கி பி 1534

erstgögl de LLoo (Spelling):

மொழியைப் பேசும் போது எழுத்துகளைப் பற்றிய எண்ணமே இருப்பது இல்லை எழுதும் போதுதான் அவற்றைப் பற்றிய எண்ணம் எழுகிறது தனித்தனிச் சொற்களைப் பற்றிய எண்ணமும் பேசும்போது அவ்வளவாக இருப்பதில்லை ஒரு கருத்து முடியும் வகையில் அமைந்துள்ள வாக்கியமே பேச்சு மொழியில் தெளிவான உறுப்பாக நிற்கிறது பேசுகின்றவர், ஒரு வாக்கியத்தைக் கூறும்போது, நீண்ட ஒலித்தொட ராகவே ஒலிக்கின்றார். எழுதுகின்றவரும் படிக்கின்ற வரும் மட்டுமே வாக்கியததைச் சொற்களாகப் பகுத்துச் சொற்களை எழுத்துகளாகப் பிரித்து உணர்கிறார்கள் அதனால் எழுத்துமொழியில் எழுத்துக் கூட்டும்முறை வேண்டியதாக உள்ளது

பேசியவாறே எழுதுதல், எழுதியவாறே பேசுதல் என்று இருந்தால், பேச்சு மொழியும் எழுத்து மொழியும் வேறுபாடின்றி விளங்க முடியும் ஆனால், எந்த நாட்டிலும் பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் வேறுபாடு இருந்து வருகிறது; பேசியவாறே எழுதுதலும் இல்லை; எழுதியவாறே பேசுதலும் இல்லை. சில மொழிகளில் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு குறைவு; வேறு சிலவற்றில் மிகுதி.