பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 67

=பனங்காய் என்பதிற்போல, ஐ என்பது அம் என்பதாம் கன்னடத்தில் அம் என்று வரும் இரண்டாம் வேற்றுமை உருபு தமிழில் வரும் ஐ என்பதற்கு நேராம் தமிழிலும் உயர்திணையில் இரண்டாம் வேற்றுமை உருபாம் ஐகாரம் அகரமென வருமென்பர் தொல் காப்பியர் செய்யாமைச் செய்த=செய்யாமற் செய்த, படர்-படை என்பவை ஐகாரத்தின் மாற்றொலியால் எழுந்த வடிவங்களோ என்பது ஆராய்தற்குரியது

ஐகாரம் எகரமாகவும் அகரமாகவும் மாறுவதன்றி, அகரம் ச, ஞ, ய என்பவற்றின்முன் அவற்றின் அண்ணச் சாயல் பெற்று அரைசன், மைஞ்சு, அரையன் என ஐகாரமாக ஒலிக்கக் காண்கிறோம் தகரத்தின் முன்னும் அத்தை = ஐத்தை என வருதல் திசை வழக் காகும்.

பொருள்: வியப்பு, அழகு, மென்ம்ை,உண்மை, கோழை, கபநோய், தலைவன், கணவன், அரசன், ஆசிரியன், தந்தை, அண்ணன், சவ்வீரபாஷாணம் என்ற பொருள்களில் ஐ என்பது வரும் தலைமகன் என்ற சிறப்புப் பொருளைக் குறிக்கும் ஐகாரமே உயர் திணையில் வந்தது. முன்னிலை உருபாக மிகப் பழங் காலத்தில் திராவிடமொழிகளில் வழங்கியது என்பது ஒரு கொள்கை

பார்க்குங் கருவி பார்வை எனக் கருவிப்பொருள் விகுதியாகவும், பறப்பது பறவை என வினைமுதற் பொருள் விகுதியாகவும், தொடுக்கப்படுவது தொடை எனச் செயப்படுபொருள் விகுதியாகவும் நிலை, கொலை என்பவற்றிற் போலத் தொழிற் பெயர் விகுதியாகவும், அவனை என்பதிற்போல இரண்டாம் வேற்றுமை உருபாகவும், போயினை என்பதிற்போல முன்னிலை ஒருமை விகுதியாகவும், இற்றை நாள் என்பது போலச் சாரியை யாகவும் ஐகாரம் வரும் À.

சுரங்களில் இளி என்ற சுரத்தின் அறிகுறியாக 'ஐ' என்பதும் வரும்