பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5



மொழியை பொறுத்தவரை அது ஆற்றலையோ கருதிய பொருளைத் தெளியவைக்கும் தெளிவையோ புரிதலையே அம்மொழி நிறைவேற்றவில்லை என்றால் முதலில் அழிவது மொழி மட்டுமென்று, அம்மொழியின் எண்ணப் பண்பாடும் இனப்பண்பாடும்தான் வாழ்வின் எத்துறைக்கும் வேரும் விழுதுகளாய் இருக்கின்றன.

இந்தப் பூமிப்பந்தில் தோன்றிய மனிதன் தன் இயற்கை வாழ்வினுக்கு ஒப்பு மொழியைப் படைத்தான். அவ்வாறு தோன்றிய மொழிகள் 2796 என புள்ளி விவரம் கூறுகிறது. உலக மொழிகளானைத்தும் பல்வேறு மொழிக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய மொழிக் குடும்பங்கள் இன்றும் நிலைத்து வாழ்ந்தாலும் சில பேச்சு வழக்கில் -எழுத்துவழக்கில் வீழ்ந்தனவாகவும் வீழாதனவுமாக இருந்து வருகின்றன. ஆகவே, இதனை செத்த மொழி என பிதற்றுதல் தகாது. அவை தம் படைப்புகளால் என்றும் நிலைத்து வாழும்; வாழ்ந்து கொண்டிருக்கும்.

மனித கூட்டம் தம் கூட்டு வாழ்க்கைக்காக உருவாக்கிக் கொண்டதே மொழி. இஃது ஒர் அடிப்படை உண்மை.

இத்தகைய மனிதர் கூட்டம் ஓரிடத்தில் தோன்றிப் பல்கிப்பரவி; அதுமொழி வழியாகவும் பரவியது. இது மற்றோர் அடிப்படை உண்மை.

மொழி நூல் என்பது உலக மொழிகள் எல்லாவற்றையும் அன்பு கொண்டு தழுவும் ஒரு பொதுக்கலை; படைப்பாக்கம்.

உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் வேர் சொற்களின் உறவாலும் ஒன்றுகூடி இலக்கண செழுமைப் பெற்று சிறந்தோங்குகிறது.

மொழிகளில் இத்தகைய இயற்கையோசை ஊடே உள்ள எழுத்துவடிவம் தமிழுக்கே உரியது சிறப்பம்சத்தான். தமிழ் மொழிக்கு உள்ள சிறப்பே அதன் எழுத்து வடிவம் எழுத்தோசை; இசையோசை; பொருளோசையுடன் ஒன்றுறவாடியே இயல்பாய் இருக்கிறது. இதனால் உலக மொழிகளின் பாதிப்பு அதன் மேல் படிந்தாலும் பிறிதொரு மொழி இணையும் போது மேலும் மேலும் பெருமை பெற்று