பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 த. கோவேந்தன்

கொள்வதனை உணர்கிறோம்; அப்போது க் என்பது போன்ற ஒலி எழும். இதனை விட்டிசை என்பர். ? என்ற ஒலியாகும் இது. வல்வெழுத்தோடு இந்த விட்டிசை ஒலி பழங்காலத்தில் எதுகை கொண்டது சிரிப் பொலி யையும், கக்கக் கெனல், கக்குதல் முதலிய இசைக் குறிப்புக் களையும் (அது கரணஒலி-Onomatopoeia) அறிந்தால் இவ்வொலியைக் கேட்கலாம்

ககரம் இரட்டித்து வரும்போது ஹ் என உயிர்ப் பிசைபோடு k-h என ஒலிக்கும் என்பர் எம் பவுலர் k, kh, g, gh, q என்ற பிற மொழி ஒலிகள் தமிழில் க் என்றே எழுதப்பெற்று ஒலிக்கப்பெறும் (உ- ம்) kara (கரம்-கை), khara (கரம் - சூடு), gara (கரம் - நஞ்சு), ghosa (கோஷம் - பேரொலி), (gamis) (கமிசு - உட்சட்டை) பிற மொழி ஒலிகளைத் தமிழில் வழங்கும் போது கால்டுவெல் கண்டதற்கிணங்க g என்ற ஒலிப்பு ஒலியைக் குறிக்கத் தனிக் ககரத்தையும் (Rega - ரீகா) k போன்ற உயிர்ப்பு ஒலியைக் குறிக்க இரட்டித்த வல்லெழுத்தையும் (Baku - பாக்கூ) எழுதுவது வழக்கமாக வருகிறது.

பொருள் : க என்பது காந்தார சுரத்தின் குறியாக வழங்குகிறது. க என்பது ஒன்று என்ற எண்ணின் குறி யாகும் (பார்க்க : எண்சுவடி). க என்பதற்குப் பிரமன் என்றும் அக்கினி என்றும் பொருள் (தமிழ் லெக்சிக்கன்); வாழ்க என்பதிற்போல வியங்கோள் விகுதியும் ஆம்

வரிவடிவம்: தமிழ் நாட்டில் வழங்கிய வடிவங்களைத் தருகின்றோம். அசோகன் எழுத்திலும் பஞ்ச பாண்டவக் குகை எழுத்துக்கள் சிறிது மாறியவை பிராமி எழுத்திலிருந்து தமிழ் எழுத்துக்கள் வளர்ந் தனவா, தென்னாட்டிலிருந்து வடக்கே எழுத்துகள் சென்றனவா, சிந்து நதிக்கரையிலிருந்து எழுத்துளகள் வளர்ந்தனவா என்று எழும் கேள்விகளுக்கு முற்ற விடை கூற முடியாது