பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 97

கெ என ஒலிப்பதனைக் குறிக்க முன்னெல்லாம் கொம்பின்மேல் புள்ளியிட்டு முன்னோர் எழுதி வந்தனர். தொல்காப்பியர் காலம் முதல் வழங்கிய முறை இதுவேயாம். பெரூ கி என்ற வீரமாமுனிவர் காலத்தில் ஒரு சுழியாக இருந்ததனை மேலும் ஒரு சுழி சுழித்து ே என்று ஏ என்பதன் குறியாகப் புதிதாகத் தாம் நுழைத்த தாகக் கொடுந் தமிழ் என்ற நூலில் அவரே குறிக்கின்றார். எ, ஏ என்பவை வட்ட வடிவெழுத்தில் வேறுபட்டதனை முன்னரே குறித்துள்ளோம். அங்கே இடப்பெறும் சுழியில் இரு வளைவுகள் ஏ. காரத்தைக் குறிக்கவந்தன. கெ என்பதில் உள்ள சுழியும் இப்படி வந்ததோ என ஆராய்தல் வேண்டும். கே என்ற நெடிலின் வடிவினை இயல்பாகவும், கெ என்ற குறிலின் வடிவினை அமைக்க முன்னைய கொம்பின்மேல் புள்ளியிட்டு விகார வடிவாகவும் கொண்டு வழங்குவதால், இந்த எழுத்து முறை குறில் எகரம் இன்றி நெடில் எகரம் பெற்று வழங்கும் வடமொழி எழுத்து முறையில் இருந்து வளர்ந்ததே என்று கூறுவாரும் உண்டு.

இந்த எழுத்தின் வளர்ச்சியைக் கீழே காண்க :

கி. மு. 3ஆம் நூற்றாண்டு # கிபி 8ஆம் நூற்றாண்டு 가 கி. பி. 9ஆம் நூற்றாண்டு ဧနု கி.பி. 10ஆம் நூற்றாண்டு f கிபி 11ஆம் நூற்றாண்டு 어 கிபி 13ஆம் நூற்றாண்டு ○学、 இக்காலம் கெ வட்டெழுத்து

8ஆம் நூற்றாண்டு 우 10ஆம் நூற்றாண்டு ? ● 11ஆம் நூற்றாண்டு ४ ८k 12ஆம் நூற்றாண்டு

12ஆம் நூற்றாண்டு - ്-- 12ஆம் நூற்றாண்டு ○み