22
தமிழ் காத்த தலைவர்கள்
எதிர்த்து அவனை வெல்ல முடியாது தோற்று ஒடினான். ‘பழுக்கக் காய்ச்சிய இரும்பில் ஊற்றிய நீரையும் மீட்கலாம் : உக்கிரப் பெருவழுதி கைப்பற்றிய கோட்டையை மீட்பது முடியாது’ என்று வேங்கை மார்பனே வியங்து வருந்திக் கூறினான். இவ்வாறு பாண்டியன் கானப்பேர்க் கோட்டையைக் கைப்பற்றினான். இக் காரணத்தால் அவனைக் 'கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்று புலவர்கள் போற்றினர்.
இறையனார் அகப்பொருள்
மூன்றாம் தமிழ்ச் சங்கமாகிய கடைச் சங்கத்தில் இருந்த புலவர்களை உக்கிரப் பெருவழுதி தக்கவாறு ஆதரித்தான். தமிழ் மொழிக்குப் புதிய முறையில் இலக்கணம் அமைக்குமாறு புலவர்களைத் தூண்டினான். அவன் பொருள் இலக்கணம் இயற்றப் புலவர்கள் இல்லாமையால் உள்ளம் வருந்தினான். அவனது வருத்தத்தைப் போக்க இறைவரே அகப்பொருள் இலக்கணத்தை ஆக்கிக்கொடுத்தார். அதைப் பெற்று மகிழ்ந்த வழுதி அதற்குச் சிறந்த உரை எழுதுமாறு செய்தான்.