பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த வழுதி

23

பாண்டியன் புலமையும் பண்பும்

அவன் உயர்ந்த தமிழ்ப் புலமை உடையவன். செய்யுட்கள் இயற்றும் திறமை பெற்றவன். அவன் பாடிய பாடல்கள் அகநானூறு, நற்றிணை ஆகிய நூல்களில் உள்ளன. அவன், சங்கப் புலவர்கள் அகப்பொருளைத் தழுவிப் பாடிய செய்யுட்களை ஆராய்ந்தான். அவற்றுள் நானூறு பாடல்களைத் தேர்ந்து எடுத்தான். அவற்றை ஊமைப் புலவராகிய உருத்திரசன்மரின் துணைகொண்டு ஒன்றுசேர்த்தான். அவ்வாறு அவன் தொகுத்த நூலுக்கு அகநானூறு என்று பெயர்.

திருக்குறள் அரங்கேற்றம்

தமிழ் மொழியில் உள்ள தலைசிறந்த நீதி நூல் திருக்குறள். அதனை இயற்றியவர் திருவள்ளுவர். அவர் தெய்வப் புலவர் என்று புலவர்களால் போற்றப்படுவார். திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறள் நூலை உக்கிரப் பெருவழுதியின் அரசவைக்குக் கொண்டு வந்தார். அவன் அந்நூலை வாங்கிப் படித்துப் பார்த்தான். அதனுடைய சிறப்பை நன்றாக அறிந்தான். உடனே அவன் அந்நூலைத் தனது அரசவையில் அரங்கேற்றினான்.