பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தலைவர் நக்கீரர்

31

பழிப்பது போன்ற செயல் என்பதை நீ உணர வேண்டும்.

கொண்டான் : இவற்றையெல்லாம் நான் கேட்க விரும்பவில்லை. எனது கருத்தை மதுரையில் மட்டும் அன்று; மாநிலம் முழுதும் சென்று பறை சாற்றுவேன். அதைத் தடுக்க எவருக்கும் உரிமை இல்லை.

நக்கீரர்: கொண்டானே ! உனக்கு வட மொழிப் பித்துத் தலைக்கு ஏறிவிட்டது. நீ அறிவை இழந்து, அன்னையையும் பழிக்கத் தொடங்கிவிட்டாய். உனக்குச் சரியான பாடம் கற்பித்தே ஆக வேண்டும்.

நக்கீரர் தந்த சாபம்

இவ்வாறு நக்கீரர் சினத்துடன் கூறினார். மதுரையில் விளங்கும் சிவபெருமானைச் சிந்தையில் கொண்டு வழிபட்டார். தெய்வத் தன்மை வாய்ங்த தமிழ்ப் புலவர்களை மனத்தில் கொண்டார். ஒரு சிறு பாடலைப் பாடினார்.

'முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி-அரணிய
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
ஆனந்தம் சேர்கசுவா கா.'