பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தமிழ் காத்த தலைவர்கள்

இப்பாடலை நக்கீரர் பாடியதும் கொண்டான் பொத்தென்று நிலத்தில் விழுந்தான். அவன் கண்கள் மூடின ; கைகால்கள் அசைவற்றன சிறிது நேரத்தில் அவன் பிணம் ஆனான்.

அடாது செய்தவர்க்கு அல்லல்

அவ்விடத்தில் கூடி நின்றவர்கள் கொண்டான் உயிர் இழந்ததைக் கண்டார்கள். "தெய்வத் தன்மை வாய்ந்த நக்கீரருடன் வாதாடினான்; உயிரை இழந்தான். 'அடாது. செய்தவர் படாது படுவர் என்பது உண்மை அல்லவா?’ என்று சொல்லி அகன்றனர். கொண்டானின் தாயும் தங்தையும் ஓடோடி வந்தார்கள். மகன் இறந்து கிடப்பதைக் கண்டார்கள். தரையில் விழுங்து புரண்டு அழுதார்கள். சங்கத் தலைவராகிய நக்கீரர் பாதத்தில் விழுங்து பணிந்தார்கள். மகனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு பணிவுடன் வேண்டினர்கள்.

நக்கீரர் நல்லுரை

பெற்றோரின் துயரத்தைக் கண்ட நக்கீரர் மனம் இரங்கினார். "உங்கள் மகனுக்கு நல்லறிவும் தாய்மொழிப் பற்றும் உண்டாக வேண்டும். நீங்கள் அவனுக்கு அவற்றை ஊட்ட வேண்டும். அந்தக் கடமையைச்