பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமுறை கண்ட சோழன்

47

என்னும் நல்லார் ஒருவர் நாள்தோறும் வழிபட்டு வந்தார். அவர் அப்பிள்ளையாரின் அருளைப் பெரிதும் பெற்றவர். அவரைப் பற்றி இராசராசன் கேள்விப்பட்டான். அவருடைய துணையால் தேவாரப் பாடல்களைத் தொகுக்கலாம் என்று அவன் எண்ணினான். அவரைத் திருநாரையூரில் சென்று கண்டான். அவரிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தான்.

நம்பியின் கல்லுரை

அதைக்கேட்ட நம்பி, “தேவாரப் பதிகங்கள் எழுதிய ஏடுகள் எல்லாம் தில்லையில் உள்ளன; அங்குள்ள பொன்னம்பலத்தின் அருகே அமைந்த அறையில் பூட்டிவைக்கப் பெற்றுள்ளன. அவற்றைப் பாடியருளிய மூவரின் கை முத்திரையுடன் காப்புச் செய்யப்பட்டுள்ளன; தில்லைவாழ் அந்தணர்களின் இசைவைப் பெற்று, அறைக் கதவைத் திறந்தால் அவ்வேடுகள் கிடைக்கும்” என்று கூறினார்.

தில்லையில், இராசராசன்

உடனே இராசராசன், நம்பியை அழைத்துக்கொண்டு தில்லையை அடைந்தான். அங்கிருந்த அந்தணப் பெரியார்களிடம் வந்த