பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தமிழ் காத்த தலைவர்கள்

திருவாரூர் வழிபாடு

இத்தகைய கலைப்பணி யாற்றிய இராசராசன் திருவாரூர்க் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவான். அக்கோவிலில் எழுந்தருளும் வீதிவிடங்கப் பெருமானிடம் அவன் மிகுந்த பத்தி பூண்டவன். ஆதலின், அப்பெருமானை இடையிடையே சென்று வழிபட்டு வருவான். ஒருநாள் அவன் திருவாரூர்க் கோவிலில் வீதிவிடங்கப் பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது சிவனடியார் ஒருவர் தேவாரப் பாடல்களை உள்ளம் உருகிப் பாடிக்கொண்டு நிற்பதைப் பார்த்தான். அப் பாடல்களை அவனும் கேட்டு அகம் உருகிக் கண்ணீர் சொரிந்தான். அவை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய அடியார்களால் பாடப் பெற்றவை என்பதை அறிந்தான். அம்மூவரும் பாடிய தேவாரப் பாடல்களை யெல்லாம் ஒன்று சேர்க்க விரும்பினான். அதற்காக அவன் பெரு முயற்சி எடுத்தான்.

நாரையூர் நம்பி

தில்லையின் அருகே திருநாரையூர் என்ற ஊர் ஒன்று உள்ளது. அங்குள்ள பொல்லாப் பிள்ளையாரை நம்பியாண்டார் நம்பி