பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. காவியம் பாடிய காவலன்


கொற்கை-குலசேகரன்

பாண்டிய நாட்டில் பண்டு விள்ங்கிய கொற்கை பழைமையான துறைமுக நகரம் ஆகும்; அது சில காலங்களில் பாண்டிய நாட்டின் தலைநகரமாகவும் விளங்கிற்று. ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னால் அந்நகரைத் தலைநகரமாகக் கொண்டு, குலசேகரன் என்னும் மன்னன் தென்பாண்டி நாட்டை ஆண்டு வந்தான்.

குலசேகரன் மக்கள்

பாண்டியர் குலத்தில் தோன்றிய குலசேகரனுக்கு இரண்டு ஆண்மக்கள் இருந்தனர். அவருள் மூத்தவன் வரதுங்கராமன்; இளையவன் அதிவீரராமன். குலசேகரன் தன் மக்கள் இருவரையும் தக்க புலவர்களிடம் தமிழ்நூல்களைப் பயிலுமாறு செய்தான். அதிவீரராமன் வடமொழியையும் நன்றாகப் பயின்றான். இருவருமே தமிழில் பெரும் புலவர்களாக விளங்கினர்.

இருவர் அரசர்

குலசேகரன் தன் அறிவுடைய மக்கள் இருவருக்கும் நாட்டைப் பகுத்துக் கொடுத்