பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழ் காத்த தலைவர்கள்


தான். மூத்தவனாகிய வரதுங்கராமன் கரிவலம்வந்த நல்லூரைத் தலைநகராகக்கொண்டு அதைச் சூழ்ந்த நிலப்பகுதியை ஆண்டு வந்தான். இளையவனாகிய அதிவீரராமன் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு, அதைச் சூழ்ந்த நிலப்பகுதியை ஆண்டு வந்தான்.

பிள்ளைப் பாண்டியன்

அரசனும் புலவனும் ஆகிய அதிவீரராமனைப் பார்ப்பதற்கு நாடோறும் பல புலவர்கள் வருவார்கள். அவன் அப் புலவர்களின் புலமையினைப் பலவாறு ஆராய்வான். அவர்கள் புலமையில் ஏதேனும் குறை கண்டால், அவர்களின் தலையில் ஓங்கிக் குட்டுவான். 'குற்றமறக் கற்றுக் கவி பாடுக !' என்று இடித்துரைத்து அனுப்புவான் அவன் சிறு பிள்ளைகளைப் போல், புலவர்கள் தலையில் குட்டி வந்தமையால் அவனைப் 'பிள்ளைப் பாண்டியன்' என்று எல்லாரும் சொல்லுவர். அதனால் புலவர் ஒருவர் 'குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை என்று பாடினார்.

அதிவீரராமன் தமிழ்ப் பணி

பிள்ளைப் பாண்டியன் ஆகிய அதிவீர ராமன் தமிழில் குற்றம் நிறைந்த பாடல்கள்