பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தமிழ் காத்த தலைவர்கள்

தான். அதனைப் பெற்ற அதிவீரராமன் அதில் எழுதியிருந்த கருத்தைப் பலமுறை படித்தான். ‘இந்நூல் வேட்டை நாய் ஓடி இளைத்தது போன்றும், கரும்பினை அடியிலிருந்து சுவைத்தது போன்றும் இருக்கிறது.’ என்று அவ் வோலையில் எழுதியிருந்தது. அதனைக் கண்ட அதிவீரராமனுக்கு நெருப்பில் நெய் வார்த்தது போல் இருந்தது. அவன் தணியாத சினத்துடன் உடைவாளை உருவிக் கொண்டு புறப்பட்டான். “இப்பொழுதே தமையன் தலையை வெட்டி வீழ்த்துவேன்” என்று வீரம் பேசினான். படை வீரர் பலருடன் அவன் கரிவலம்வந்த நல்லூரை அடைந்தான்.

வழிபாட்டு வேளை

அங்கு வந்த அதிவீரராமன், தமையன் அரண்மனையுள்ளே புகுந்தான். அங்கு வர துங்கராமன் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்தான். அவன் நாள்தோறும் தவறாது சிவபூசை செய்பவன். பூசையின் முடிவில் சிவபெருமானைத் துதித்துச் செய்யுள் ஒன்று இயற்றுவான். பூமாலையுடன் அப் பாமாலையினையும் அணிந்து மகிழ்வான். அரண்மனையுள்ளே புகுந்த அதிவீரராமன், தமையன்