பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காவியம் பாடிய காவலன்

57

சிவபூசை செய்து கொண்டிருப்பதைத் தெரிந்தான். வழிபாட்டு வேளையில் எந்த வன்செயலும் செய்யக்கூடாது என்று பொறுத்திருந்தான். அவன் கையில் வாளேயேந்திப் பூசையறையின் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான்.

இறைவனுக்குப் பாமாலை

வரதுங்கராமன் சிவபூசையை முடித்தான். வழக்கம்போல் பாமாலை யொன்றைத் தொடுத்துப் பத்தியுடன் பாடி வழிபட்டான். ‘இறைவன் புகழையே எப்போதும் பாட வேண்டும், உலகில் பிறந்திறக்கும் மக்களைப் பாடுவதால் பயன் இல்லை; அவ்வாறு பாடுவது மீண்டும் மீண்டும் உலகில் பிறப்பதற்குக் காரணமாகும். கோடிக்கணக்கான நரகக் குழியில் விழுந்து அழுந்துவதற்கும் அது காரணமாகும். ஆதலால் புலவர்களே! நீவீர் இறைவனையே நெஞ்சுருகிப் பாடுங்கள்’ இக்கருத்தினையுடைய பாடல் ஒன்றை அவன் பாடினான்.

அரசன் பிழையை அறிதல்

அப்பாட்டைக் கேட்ட அதிவீரராமன் உள்ளம் தழலில்பட்ட மெழுகைப் போல் உருகியது. அவன் கையில் இருந்த வாள்