58
தமிழ் காத்த தலைவர்கள்
தானாகவே நழுவித் தரையில் விழுந்தது. பூசையறையில் புகுந்து தமையன் தாளில் விழுந்து பணிந்தான். பிழையைப் பொறுத்து அருளுமாறு தமையனை வேண்டினான். குற்றத்தை உணர்ந்துகொண்ட தம்பியைத் தமையன் வாரித் தழுவிக் கொண்டான்.
அண்ணியாரின் அறிவுரை
இச்சமயத்தில் அங்கு வந்த வரதுங்கன் மனைவி நிகழ்ந்ததை அறிந்தாள். அவள் தன் மைத்துனனாகிய அதிவீரராமனுக்குச் சிறந்த அறிவுரையொன்றைக் கூறினாள். “அரசே! உடன்பிறப்பு என்பது உயர்ந்த தோள் வலிமை அல்லவா! அதனை இழக்கத் துணிந்தீரே இராமனும் பரதனும் போன்ற உடன் பிறப்பு அல்லவா! உலகில் உயர்வைத் தரும் ; கதிரவன் மைந்தனாகிய சுக்கிரீவனையும், இலங்கை வேந்தனாகிய இராவணனையும், பாண்டவரில் ஒருவனாகிய பார்த்தனையும் உடன் பிறப்பின் சிறப்பை உணர உற்று நோக்காதீர்!”
'செஞ் சுடரின் மைந்தனையும் தென்னிலங்கை
வேந்தனையும்
பஞ்சவரில் பார்த்தனையும் பாராதே-விஞ்சு ::விரதமே பூண்டிந்த மேதினியை ஆண்ட ::பரதனையும் ராமனேயும் பார்'