பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழ் காத்த தலைவர்கள்

சிறுவர் முதல் முதியோர் வரை எல்லோரும் நல்ல தமிழ் நூல்களைக் கற்றுணரவேண்டும் என்று விரும்பினார். அதனால் அவர் பழைய செய்யுள் நூல்களே வசனகடையில் எழுதிப் பரப்பிவரலானார்.

இலங்கை நாட்டில் யாழ்ப்பாணம்

வசன நடையால் தமிழை வளர்த்த ஆறுமுக நாவலர் இலங்கை நாட்டைச் சார்ந்தவர். நம் தமிழகத்திற்குத் தெற்கே கடல் நடுவே அமைந்த ஒரு தீவு இலங்கை நாடு. அதனே ஈழநாடு என்றும் குறிப்பது உண்டு. அவ்விலங்கை நாட்டின் வடபால் உள்ள பகுதிக்கு யாழ்ப்பாணம் என்றுபெயர். அங்கு வாழும் மக்களே யாழ்ப்பாணத்தார் என்பர். பண் என்பது இசையைக் குறிக்கும். பண்ணில் வல்லவர் பாணர் எனப்பட்டனர். யாழ் இசையில் வல்லவர்களாகிய பாணர் 'யாழ்ப்பாணர்' என்று வழங்கப்பெற்றனர். யாழ்ப்பாணர்கள் பெருகி வாழ்ந்த இடம் 'யாழ்ப்பாணம்' எனப் பெயர் பெற்றது. இலங்கை வேந்தன் ஆகிய இராவணன் யாழ் இசையில் வல்லவன் அல்லவா? அவன் யாழ் இசை வல்லாரைத் தன் நாட்டில் குடியேற்றி இருக்கலாம்.