பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வசன நடை கைவந்த வல்லார்

75


யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர்

யாழ்ப்பாணத்தில் வாழ்பவர்கள் தமிழ் மக்கள். அவர்கள் தூய தமிழைப் பேசும் இயல்புடையார். அங்குத் தமிழும் சைவமும் தழைத்து ஓங்கி வளர்ந்துள்ளன. அப்பகுதியில் திருநெல்வேலி என்று ஒர் ஊர் உண்டு. அவ்வூரில் ஞானப்பிரகாசர் என்னும் அறிஞர் ஒருவர் தோன்றினார். அவர் கார்காத்த வேளாளர் குலத்தைச் சார்ந்தவர்; தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர். அவர் தமிழ்நாட்டிற்கு வந்து திருவண்ணமலையில் துறவு பூண்டார்.

பெற்றோரும் உற்றோரும்

இத்தகைய ஞானப்பிரகாசர் மரபில் கந்தப் பிள்ளை என்னும் ஒருவர் விளங்கினார். அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரைச் சேர்ந்தவர். அவருடைய மனைவியார் சிவகாமியம்மையார். இவர்கள் இருவருக்கும் ஐந்து ஆண்மக்களும் மூன்று பெண்மக்களும் பிறந்தனர். அவ்வைந்து ஆண் மக்களில் இறுதியில் தோன்றியவரே ஆறுமுகநாவலர் ஆவர். முதல் நான்கு ஆண்மக்களும் அரசியல் அலுவல்களில் அமர்ந்திருந்தனர். அவர்கள் முறையே மருத்துவம், இசை, தமிழ்ப்புலமை, உலகி-