பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்95



ஆதி: சுவாமி ! கோபித்துக் கொள்ளக் கூடாது.
இவ்வாசனத்தில் அமர்ந்து சொல்லுங்கள்.
நார: லங்காபுரம் போனதும்...
ஆதி: என்ன சுவாமி, இன்னும் லங்காபுரத்திலேதான்
கவனம் இருக்கிறது போலும்!
நார: ஆம். அதிலேதான் விஷயம் இருக்கிறது.
ஆதி: ஆனால் சொல்லுங்கள்.
நார: லங்காபுரம் போனேனா?
ஆதி: போனதும் போகாததும் யாரைக் கேட்கிறீர்கள்?
தங்களுக்கே சந்தேகந்தானோ?
நார: சரி, சரி இங்கு நமக்குச் சரிப்படாது.
ஆதி: இல்லை சாமி சொல்லுங்கள்.
நார: எனக்கெதிரே இரண்டு பேர் வந்தார்கள்.
ஆதி: என்ன சுவாமி?
நார: அவர்கள் பேசிக் கொண்டு போனதைத்தானே
கேட்டது?
ஆதி: நல்லது. அவர்கள் பேசிக் கொண்டு போனதில்
நீங்கள் கேட்ட பிரஸ்தாபமென்ன?
நார: அதுவா? இந்திரஜித்து சுலோசனையைக்
கொண்டு வந்திருக்கிறான் என்ற சமாசாரந்தான்.
ஆதி: ஆஹா! அப்படியா?

இதுகாறுங் கூறியவற்றால் தவத்திரு சங்கரதாச சுவாமிகள் ஒரு கை தேர்ந்த நாடகாசிரியர் என்பதும், தாழ்ந்திருந்த தமிழகத்தில் நாடகக் கலையைக் கை தூக்கி விட்டு நிலை நிறுத்திய பெருமை அவருக்கு உரியது என்பதும் நன்கு விளங்கும். அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட கதைகள் அனைத்தும் அவர்