பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 115

இலங்கையைச் சேர்ந்த அரங்கசாமிப்பிள்ளை என்னும் அறிஞர், தத்துவரீதியில் கவிதை நடையில் எழுதிய அரிச் சந்திரா என்ற நாடகத்தை, அறிஞர் ஆனந்த குமாரசாமி யின் தந்தை குமாரசாமி அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1863-ல் விக்டோரியா ராணியின் முன்னிலையில் நடித்துக்காட்டிப் பாராட்டுப் பெற்றார் என்ற செய்தியை, 23 - 1 - 1864ம் ஆண்டில் வெளியான சாட்டர்டே ரெவ்யூ போன்ற லண்டன் பத்திரிகைகளின் குறிப்புக்களையெல்லாம் முத்துக்குமாரசாமியின் வாழ்க்கையும் நூல்களும் என்ற நூலின் 82-ம் பக்கத்தில் எடுத்துக்காட்டியுள்ளார், அதன் ஆசிரியர் மலேசியா எஸ். துரைராஜசிங்கம் என்னும் அறிஞர்.

சமுதாய நாடகத் தோற்றம்

இந்திய நாடகப் பேரிலக்கியங்கள் மேலைநாடுகளில் வர வேற்கப் பெற்றும் மொழி பெயர்க்கப்பெற்றும் நடித்துப் புகழ் பெற்றதைப்போல், மேலைநாட்டுப் பேரறிஞர்களின் நாடகங்கள் பல ஆங்கில மொழியிலும், மொழி மாற்றம் செய்யப்பெற்றும், தழுவலாகவும் இந்தியப் பெருநாட்டின் பல பகுதிகளிலும் பல மொழிகளிலும் பரவலாக நடிக்கப் பெற்றன.

உலக மகாநாடகப் பேராசிரியரென்று போற்றப்பெரும் ஷேக்ஸ்பியரின் இரண்டாம் ரிச்சர்ட், மேக்பத், ஹாம்லெட், ஒத்தல்லோ, பழிக்குப்பழி, ஆண்டெனி கிளியோபத்ரா, வெனிஸ் வர்த்தகன் போன்ற நாடகங்களும், இந்திய நாடக உலகில் அறிமுகமானதன் காரணமாகத் தமிழ் நாடக உலகிலும் ஒரு மாறுதலை உண்டாக்கின.

கொண்டும் கொடுத்தும் இலக்கியப் பரிமாற்றங்கள் செய்து கொண்டதன் பயனாக, மேலைநாட்டின் புதினங்க ளைத் தழுவி நமது நாட்டிலும், நம் நாட்டின் மரபுகளைத்