பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கவிஞர் கு. சா. கி.

தழுவி மேலைநாடுகளிலும், நாடக உத்திகளைக் கையாளும் முறைகள் தோன்றலாயின.

இம்முறையைத் தழுவிச் சமுதாய சீர்கேடுகளை எடுத்துக்காட்டும் சமூக சீர்திருத்த நாடகமாக, முதன் முதலில் இராமசாமி ராஜா என்பார் பிரதாபச் சந்திர விலாசம் என்னும் நாடகத்தை 1875-ல் எழுதி வெளி யிட்டார்.

இதனையடுத்து, காசி விசுவநாத முதலியார் என்பார் டம்பாச்சாரி விலாசம் என்னும் சமூக நாடகத்தைத் தமிழ் நாடக மேடைக்கு அளித்தார்.

இதற்குப்பின், சற்றேறக் குறைய கால் நூற்றாண்டுக் காலம் வரை வேறு சமுதாய நாடகங்கள் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. பம்பல் திரு. சம்பந்த முதலியார் அவர்கள் தாம் தோற்றுவித்த சுகுணவிலாச சபையின் நிகழ்ச்சிகளுக் காகவும், நாடகக்கலையில் தாம் கொண்டிருந்த ஆர்வம் காரணமாகவும், சாகுந்தலம், விக்ரம ஊர்வசி, மாளவிகாக் கினி மித்ரம்,இரண்டு நண்பர்கள், சாரங்கதரா, மனோஹரா, கள்வர்தலைவன் போன்ற எண்ணற்ற நாடகங்களை எழுதித் தம் சுகுணவிலாச சபையின் மூலமே தயாரித்து மேடை யேற்றி வெற்றி கண்டார்.

ஆயினும், மேற்கண்ட சிறந்த நாடகங்கள்கூட, பிறதொழில்துறை நாடகக் குழுக்களின் மேடைகளில் இடம் பெற்ற காலம் 1915-க்கு பிறகேயாகும்.

ஆம் இருபத்தைத்தாண்டுக் காலம் இடையறாது உழைத்து எண்ணற்ற நாடகங்களை எழுதித் தயாரித்து. நகரங்கள் தோறும் நடித்துப் புகழ்பெற்ற பிறகுதான், பம்மல்சம்பந்த முதலியாரின் திறத்தையும் தரத்தையும் சிறப்பையும் உணர்ந்து வரவேற்கத் துணிந்தது தமிழ் நாடக உலகம். அதையும் சிறப்பாகத் தயாரித்து வழங்குவதற்கு மயிலை எம். கந்தசாமி முதலியார் அவர்களின் ஆற்றல்மிக்க